மீண்டும் தன்னுடைய வலிமையான கரங்களை ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா செலுத்த திட்டமிட்டு வருகின்றது. நோக்கியா முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என கருதப்படும் சில மாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நோக்கியா முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இதுவா ?

நோக்கியா N1 டெப்ள்ட் , நோக்கியா C1 ஆண்ட்யார்டு மற்றும் விண்டோஸ் போன் மற்றும் புதிதாக வெளியாகியுள்ள தகவல் நோக்கியா P1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என மூன்று கருவிகளை நோக்கியா ஃபாக்ஸ்கான் போன்றவை திட்டமிட்டு வருகின்றது. நோக்கியா பிராண்டில் மொபைல்களை தயாரிக்க அடுத்த 10 வருடங்களுக்கு ஹெச்எம்டி குளோபல் (HMD Global ) நிறுனுத்துடன் இணைந்த செயல்பட உள்ளது.

நோக்கியா என்1

நோக்கியா என்1 எனப்படும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை அடிப்படையாக டெப்ளெட் கருவியானது. பல நவீன அம்சங்களை பெற்றதாக விளங்கும் என கருதப்படுகின்றது. நோக்கியா என்1 டெப்ளெட் தயாரிப்பதற்க்கான திட்ட வரைவு மற்றும் உதிரிபாகங்கள் பெறுவதற்கான ஒப்பந்தங்களை நோக்கியா மேற்கொண்டுள்ளது.
நோக்கியா சி1 எனப்படும் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் என இரு இயங்குதளங்களிலும் இயங்கும் வகையிலான மொபைலாக இருக்கலாம் என யூக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நோக்கியா முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இதுவா ?

நோக்கியா அக்வோஸ் பி1

ரஷ்யாவின் ஆன்லைன் இணையதளம் வெளியிட்டுள்ள புதிய தகவலின் அடிப்படையில் நோக்கியா அக்வோஸ் பி1 என்ற பெயரிலான இந்த கருவியின் படங்கள் நீலம் மற்றும் சால்மன் வண்ணங்களில் வெளிப்படுத்தியுள்ளது.
ஃபாக்ஸ்கான் வசம் உள்ள சார்ப் மற்றும் அமெரிக்காவின் இன்ஃபோகஸ் போன்ற நிறுவனங்களின் திறன்மிகுந்த பொறியாளர்களை  கொண்டு வடிவமைக்கப்பட உள்ள அகவோஸ் பி1 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.1 இயங்குதளத்தினை அடிப்படையாக 5.3 இன்ச் முழு ஹெச்டி IGZO LCD திரையுடன் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸருடன் இணைந்த 3 ஜிபி ரேம் உடன் இணைந்த 32 ஜிபி இன்ட்ரனல் மெம்மரி பெற்றதாக இருக்கும். 
23 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உடன் முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல் கேமரா பெற்றிருக்கும். 3000mAh பேட்டரி பேக்கப் பெற்றிருக்கும்.
பிரிமியம் விலையில் மிகசிறப்பான அம்சங்களுடன் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நோக்கியா பி1 வாயிலாக புதிய ஸ்மார்ட்போன் பாதையை கட்டமைக்க திட்டமிட்டு வருகின்றது.
Q3 , 2016 நிதி காலண்டில் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. முதல் ஸ்மார்ட்போன் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரவுள்ளதால் பரவலாக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 
எண்ணற்ற நோக்கியா ரசிகர்களுக்கு நிச்சியம் இனிப்பான செய்தி ஆக இருக்கும். நோக்கியா திரும்ப வெல்லுமா ? உங்கள் கருத்து என்ன ? கமெண்ட்ஸ் பன்னுங்க…
 Buy Intex mobiles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here