ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் வாயிலாக களமிறங்கியுள்ள நோக்கியா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபீச்சர் போன்களில் ஒன்றான  நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் மொபைல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

நோக்கியா 150

கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட  நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் பீச்சர் போன்களை அறிமுகம் செய்த எச்எம்டி குளோபல் இரு மொபைலின் விற்பனையை இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதியில் துவங்கும் என அறிவித்திருந்தது.

இந்த டூயல் பீச்சர் மொபைலில் 2.4 அங்குல QVGA 240×320 பிக்சல் தீர்மானம் கொண்ட திரையுடன், நோக்கியாவின் சீரிஸ் 30+ இயங்குதளத்தில் செயல்படும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த டூயல் சிம் போன் 1020 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் எம்பி3 பிளேயர், பன்பலை ரேடியோ, ப்ளூடூத், 2MP VGA கேமரா உடன் இணைந்த எல்இடி பிளாஷ் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் பிரபலமான பாம்பு கேமான ஸ்நேக் எக்சீனியா வழங்கப்பட்டிருக்கலாம்.

150 டூயல் பீச்சர் போன்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.2,059 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களையும் மேம்படுத்தப்பட்ட புதிய நோக்கியா 3310 போன்ற மொபைல்களை நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் வரையில்) 120க்கு மேற்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதே கால கடத்தில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.