ரூ.3310 விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ள எதிர்பார்க்கப்படுகின்ற நோக்கியா 3310 மொபைல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்…! 17 ஆண்டுகளுக்கு பிறகு நோக்கியா 3310 மொபைல் புதிதாக மறுபிரவேசம் எடுத்துள்ளது.

நோக்கியா 3310 மொபைல் பற்றி தெரிய வேண்டிய 10 விஷயங்கள்..!

நோக்கியா 3310

இந்தியாவிலே தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கின்ற நோக்கியா 3310 ஃப்யூச்சர் மொபைலை நோக்கியா நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற வித்திங்ஸ் பிராண்டின் கீழ் நோக்கியா மொபைல்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

 • டிசைன் மற்றும் டிஸ்பிளே

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிதாக சந்தையில் களமிறக்கப்பட்டுள்ள 3310 மொபைலில் முந்தைய தோற்ற அமைப்பிலே வட்ட வடிவ டிசைனுடன் சிறப்பான தோற்றத்துடன் சிவப்பு , மஞ்சள் ,நீலம் உள்பட கிரே போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.

2.4 அங்குல வண்ண திரையுடன் 240 x 320 பிக்சல் அளவுடன் பிக்சல் அடர்த்தி 167ppi பெற்று விளங்குகின்றது.

நோக்கியா 3310 மொபைல் பற்றி தெரிய வேண்டிய 10 விஷயங்கள்..!

 • புதிய ஸ்னேக் கேம்

புதிதாக எத்தனை ஆண்ட்ராய்டு கேம் நீங்கள் விளையாடினாலும் முதல் முறையாக நோக்கியா 3310 கருவியில் கேம் விளையாடியிருந்தால் என்றும் உங்கள் நினைவில் இருக்கின்ற ஸ்னேக் கேம் மீண்டும் கலர்ஃபுல்லான திரையில் இனி விளையாடலாம்.

நோக்கியா 3310 மொபைல் பற்றி தெரிய வேண்டிய 10 விஷயங்கள்..!

நோக்கியா 3310 மொபைல் பற்றி தெரிய வேண்டிய 10 விஷயங்கள்..!

 • கேமரா

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள எல்இடி ஃபிளாஷ் உடன் இணைந்த 2 மெகா பிக்சல் கேமரா பெற்றுள்ளதால் எளிமையான படங்களை சிறப்பாக பெறலாம்.

 • மெம்மரி

கடந்த கால நோக்கியா 3310 மொபைலில் 8 வந்த அழைப்புகள் , 8 தவறவிட்ட அழைப்புகள் மற்றும் 8 டயல் செய்த அழைப்புகளுடன் சில குறுஞ்செய்திகளை சேமிக்கும் வகையில் அமைந்திருந்த மொபைல் தற்பொழுது 16MB உள்ளடங்கிய நினைவகத்துடன் கூடுதலாக 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 • மைக்ரோ யூஎஸ்பி

பழைய பெரிய பின் சார்ஜருக்கு மாற்றாக புதிதாக இணைக்கப்பட்டுள்ள மைக்ரோ யூஎஸ்பி வாயிலாக சார்ஜ் செய்யவும் கூடுதலாக படங்கள் மற்றும் வீடியோவினை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

 • ஹெட்போன் ஜாக்

பன்பலை ரேடியோ , ம்யூசிக் பிளேயர் போன்றவற்றை பெற்றுள்ளதால் 3.5mm ஆடியோ ஜாக் பெற்று சிறப்பான சப்தம் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நோக்கியா 3310 மொபைல் பற்றி தெரிய வேண்டிய 10 விஷயங்கள்..!

 • டூயல் சிம்

இரு சிம் கார்டுகள் இடம்பெறும் வகையிலான ஆப்ஷனை பெற்றுள்ளது.

 • பேட்டரி

முந்தைய மாடலில் 900mAh பேட்டரியை சேமிப்பு திறனை கொண்டதாக விளங்கியது. தற்பொழுது 1200mAh பேட்டரி திறனை பெற்றுள்ளதால் 22 மணி நேரம் பேசம் திறனுடன் மற்றும் 31 நாள்களுக்கு ஸ்டேன்ட் பை டைம் உள்ளதால் சராசரியாக 2 முதல் 3 நாட்கள் வரை தாரளமாக தாக்குபிடிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

 • வசதிகள்

பல்வேறு புதிய வசதிகளை பெற்றுள்ள புதிய நோக்கியா 3310 மொபைலில் புளூடூத் 3.0 , 2ஜி அலைவரிசை (GSM 900/1800 MHz), புதிய UI நோட்ஸ் போன்றவை இடம்பெற்றுள்ளது.

 • விலை

இந்திய சந்தையில் நோக்கியா 3310 ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் இதன் விலை ரூபாய் 3310 ஆகும். மே 18 முதல் ஆஃப்லைனில் விற்பனைக்கு கிடைக்கும்.

நோக்கியா 3310 மொபைல் பற்றி தெரிய வேண்டிய 10 விஷயங்கள்..!

நோக்கியா 3310 நுட்ப விபரங்கள்
 • புஸ் பொத்தான் ஐகானிக் வடிவத்தில்
 • 2 MP கேமரா எல்இடி ஃபிளாஷ்
 • ஹெட்போன் ஜேக்
 • 2.4” வளைந்த லேயர் கொடுக்கப்பட்டுள்ளதால் சூரிய ஒளியிலும் பார்க்க இயலும்
 • இரு சிம் கார்டு ஆப்ஷன்
 • 2ஜி அலைவரிசை  (GSM 900/1800 MHz)
 • புதிய UI நோட்ஸ்
 • 22 மணி நேரம் பேசும் திறன் கொண்ட அட்டகாசமான பேட்டரி
 • பன்பலை ரேடியோ மற்றும் MP3 பிளேயர்
 • 16 MB சேமிப்பு மற்றும் கூடுதலாக மைக்ரோ எஸ்டி வழியாக 32 GB வரை அதிகரிக்கலாம்
 • மைக்ரோ யூஎஸ்பி சார்ஜர்
 • புளூடூத் 3.0
 • நிறங்கள் சிவப்பு , மஞ்சள் ,நீலம் உள்பட கிரே

புதிய 3310 உங்களுக்கு பிடிச்சிருக்கா வாங்க விருப்பமா ? கீழுள்ள கமென்ட் பாக்சில் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here