ஒரு நிமிடத்திலே நோக்கியா 6 மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் சந்தைக்கு ஆண்ட்ராய்டு வாயிலாக நோக்கியா பிராண்டை ஹெச்எம்டி அறிமுகம் செய்துள்ளது.

சில நொடிகளில் நோக்கியா 6 விற்று தீர்ந்தது

நோக்கியா6  சீனா நாட்டின் பண மதிப்பில்  CNY 1,699 (இந்திய மதிப்பு ரூ.17,000)  விலையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலே 2.50 லட்சம் முனபதிவுகளை கடந்த நிலையில் நேற்றைய முடிவில் 1 மில்லியன் அதாவது 10,0000 லட்சம் முன்பதிவுகளை கடந்துள்ளது.

நோக்கியா 6

நோக்கியா6 ஸ்மார்ட்போனில்   5.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன்  2.5டி கொரில்லா கிளாஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 430 SoC உடன் இணைந்த 4GB ரேம் உடன் 64GB இன்டரனல் மெம்மரி பெற்றுள்ளது. மேலும் நோக்கியா6 மொபைல் போனில் இரு சிம் கார்டு ஆப்ஷன்இடம்பெற்றுள்ளது.

இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் கேமரா டியூவல் டோன் எல்இடி பிளாஷ் ஆப்ஷனுடன் மேலும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here