ஹெச்எம்டி நிறுவனத்தின் சார்பில் செயல்படுகின்ற நோக்கியா 9 பிளாக் ஷீப் மொபைலில் கண் கருவிழி ஸ்கேனர் அம்சத்துடன் நோக்கியா ozo ஆடியோ வசதியை பெற்றிருக்கூடும் மாடலாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா 9 மொபைல் நுட்ப விபரம் வெளியானது

நோக்கியா 9 மொபைல் நுட்பவிபரம்

 • நோக்கியா 9 கருவியில் 5.5 அங்குல QHD OLED திரையை பெற்றிருக்கும்
 • பாதுகாப்பு சாரந்த அம்சாக கண்ணின் கருவிழி கொண்டு மொபைலை திறக்கும் வகையிலான ஐரிஸ் ஸ்கேனரை பெற்றிருக்கும்.
 • 6ஜிபி ரேம் பெற்று  க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிரசஸர் பெற்றிருக்கும்.

முதன்முறையாக நோக்கியா 9 மொபைல்போனில் ஐரிஸ் ஸ்கேனர் வசதியுடன்  5.5 இஞ்ச் QHD OLED திரையை பெற்றிருப்பதுடன் 6ஜிபி ரேம் பெற்று க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிரசஸர் கொண்டு இந்த மொபைல் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

22 மெகாபிக்சல் பின்புற கேமரா இரட்டை லென்ஸ் வசதியுடன் , முன்புறத்தில் 12 மெகாபிக்சல் கேமரா பெற்றிருப்பதுடன் மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான  க்வால்காம் குயீக்சார்ஜ் 4.0 அம்சத்தை பெற்றதாக நீர்புகா மற்றும் தூசு போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையிலான ஐபி68 தர சான்றிதழை பெற்றதாக விளங்கும்.

 • 5.5-இஞ்ச் QHD OLED டிஸ்பிளே
 • ஸ்னாப்டிராகன் 835, அட்ரெனோ 540
 • 22 MP டூயல் லென்ஸ் Carl-Zeiss பின்புற கேமரா
 • 12 MP முன்பக்க கேமரா
 • 6 GB ரேம்
 • 64 GB / 128 GB சேமிப்பு
 • 3800 mAH பேட்டரி
 • க்வால்காம் குயீக்சார்ஜ் 4.0
 • ஐரிஸ் ஸ்கேனர்
 • கைரேகை ஸ்கேனர்
 • நோக்கியா OZO ஆடியோ அம்சம்
 • IP68 சான்றிதழ்
 • ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகட்

அடுத்த சில மாதங்களில் நோக்கியா 9 மொபைல் விற்பனைக்கு வெளியிடப்படலாம். இந்தியாவில் நோக்கியா 3 , நோக்கியா 5 ,நோக்கியா 6 மொபைல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here