பசிபிக்  கடலின் மிக ஆழமான பகுதியில் மிரட்டலான தோற்ற அமைப்பினை கொண்ட விலாங்கு வடிவிலான பேய் மீன் ஓன்றை அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் முதன்முறையாக கண்டுபிடித்துள்ளது.

பசிபிக் மகாசமுத்தரத்தின் மிக ஆழமான அதாவது 8200 அடி ஆழத்தில் மிக வித்தியாசமான பயமுறுத்தும் தோற்றத்தினை கொண்டுள்ள விலாங்கு வடிவ தோற்ற அமைப்பில் அப்பிநெயிடே வகையை சார்ந்த மீனை கண்டுபிடித்துள்ளனர்.

 இந்த வகையான மீனை முதன்முறையாக ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மீன் தோற்ற அமைப்பு குறித்து பலதரப்பட்ட பெயர்களும் ஆலோசனைகளும் சர்வதேச அளவில் மக்கள் புதிதுதாக பெயரை வைத்துக்கொண்டுள்ளனர்.

மீன் உயிரியல் நிபுணர் புரூஸ் மண்டி கூறுகையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இது மீன் அரிய வகை புது வகையான மீன் ரகமாகும் என தெரிவித்துள்ளார்.