இந்திய பொது தொலைதொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் மற்றும் டேட்டா மெயில் இனைந்து இந்தியாவில் 8 மொழிகளில் மின்னஞ்சல் சேவையை வழங்க உள்ளது. பிஎஸ்என்எல் இமெயில் சேவையில் தமிழ் மொழியில் கிடைக்க உள்ளது.

பிஎஸ்என்எல் பிராண்ட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவையை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அங்கமாக செயல்படுத்தப்பட உள்ளது. ஜெயப்பூரை சேர்ந்த டேட்டாமெயில் நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்பட உள்ள இந்த சேவையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் பெறலாம்.

ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல் பயன்படுத்துபவர்கள் டேட்டாமெயில் ஆப்ஸ் தரவிறக்கி அதனுள் நமக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் , தெலுங்கு , கன்னடா , பெங்காலி , ஹிந்தி , மராத்தி , பஞ்சாபி  மற்றும் குஜராத்தி  என மொத்தம் 8 மொழிகள் முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள மொழிகளில் 0.1 சதவீதம் மட்டுமே இணைய பயன்பாட்டில் உள்ளதாகவும் இந்தியாவில் உள்ள 89 சதவீத மக்கள் ஆங்கிலம் மொழியில் தகவலை பரிமாற இயலாதவர்களாகவே உள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்தியாவில் அதிகம் பேசு மொழிகள் கீழே சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக பயன்பாட்டில் உள்ள மொழிகள்  ஹிந்தி (544.39 மில்லியன்), பெங்காலி (107.60 மில்லியன்), தெலுங்கு (95.4 மில்லியன்), மராத்தி (92.74 மில்லியன்), தமிழ் (78.41 மில்லியன்), உருது (66.47 மில்லியன்), குஜராத்தி (59.44 மில்லியன்), கன்னடா (48.96 மில்லியன்), பஞ்சாபி (37.55 மில்லியன்), அசாம் (16.98 மில்லியன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here