உலகின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் பிரீடம் 251 மொபைல் டெலிவரி  தொடங்கப்பட உள்ள நிலையில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கீழ் ரூ.50000 கோடி நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ரிங்கிங் பெல்ஸ் நிர்வாக இயக்குனர் மொகித் கோயல் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஓரு வழியாக டெலிவரிக்கு தயாராகியுள்ள பிரீடம் 25 மொபைல்போன் முதற்கட்டடமாக 5000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே டெலிவரி கொடுக்கப்பட உள்ளதாம். அதனை தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் நிறை மற்றும் குறைகள் சேகரித்த பின்னர் மற்றவர்களுக்கு டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.251+40 டெலிவரி சார்ஜ் என மொத்தம் ரூ.291 செலுத்தி பிரீடம் 251 மொபைலை பெறலாம். ஒரு மொபைல் போன் தயாரிப்பில் ரூ.180 முதல் ரூ.270 வரை இழப்பீடு ஏற்படுதவதனால் அதனை ஈடுகட்ட  வகையில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

பிரீடம் 251 மொபைல்போனில் 100க்கு மேற்பட்ட ஆப்ஸ் கொடுக்கப்பட உள்ளது. இதன் விலை ரூ.1 முதல் ரூ.3 வரை இருக்கும் எனவும் இதன் வாயிலாக வருமானத்தை பெற்று ஈடுகட்டவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஓர் அங்கமாக செயல்படும் வகையில் ரூ.50,000 கோடி நிதி உதவி கேட்டு பிரதர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக மோகிதி கோயல் தெரிவித்துள்ளார்.

பிரீடம் 251 ஸ்மார்ட்போன் நுட்ப விபரங்கள்

  • டிஸ்பிளே ; 4 இன்ச் டிஸ்பிளே 
  • பிராசஸர் ; 1.3GHz குவாட் கோர் பிராசஸர் 
  • இயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் 
  • ரேம் ; 1GB ரேம் 
  • கேமரா; 8 மெகாபிக்சல் கேமரா 
  • முன்பக்க கேமரா ; 3.2 மெகாபிக்சல் கேமரா 
  • சேமிப்பு ; 8GB (MicroSD upto 32GB) 
  • பேட்டரி ; 1800mAh 
  • விலை ;251
இன்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் விலை குறைந்த ஹெச்டி எல்இடி டிவி விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் ரிங்கிங் பெல்ஸ் அலுவல் இனையதளம் மேம்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ; 6 மொபைல்போன்கள் மற்றும் 3 பவர்பேங்க் அறிமுகம் பிரீடம் 251