உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பில்கேட்ஸ் தன்னுடைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த 14வயது வரை அனுமதியளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பில்கேட்ஸ்

உலக பணகாரராக விளங்கினாலும் எளிமைக்கு பெயர் போன பில்கேட்ஸ் மற்றும் அவருடைய மனைவி மெலின்டா கேட்ஸ் இருவருக்கும் மூன்று குழந்தைகள் (ஜெனிஃபர் (20), ரோரி (17), மற்றும் ஃபோப், (14) உள்ளனர். டெக் உலகின் சாமராஜ்யமாக விளங்கும் மைக்ரோசாஃபட் தலைவராக இருந்தும் தன்னுடைய குழந்தைகளுக்கு டெக்னாலஜி தொடர்பான சேவகைளை பயன்படுத்த 14 வயது வரை பயன்படுத்த தடை விதித்திருந்தார்.

சமீபத்தில் இங்கிலாந்தின் பத்திரிக்கை (British tabloid Daily Mirror) ஒன்றுக்கு பேட்டி அளித்த கேட்ஸ் அறக்கட்டளை துனை தலைவர் மெலின்டா கேட்ஸ் கூறுகையில் டெக்னாலஜி தொடர்பான சேவைகளை 14 வயது வரை பயன்படுத்த எங்கள் குழந்தைகளை அனுமதிக்கவில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் ஸ்மார்ட்போன் போன்ற டெக்னாலஜி சார்ந்த சேவைகளை பன்படுத்துவதில் இருந்து விலகி இருப்பதனால் குழந்தைகள் தங்களுடைய நண்பர்கள் , விளையாட்டு போன்றவற்றில் ஆர்வமாக ஈடுபடவும் ,இரவில் நிம்மதியாக உறங்கவும் வழி வகுக்கின்றது.

மேலும் உணவருந்தும் நேரங்களில் டேனிங் டேபிள் மேல் மொபைல்களை பயன்படுத்துவதனை தவிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். டெக் உலகில் பல முன்னணி தலைவர்கள் தங்கள் குழந்தைகளை குறிப்பட்ட சில வயது வரை டெக் உலகின் வசதிகளை பயன்படுத்த தடை விதிப்பது என்பது.. இது புதிதல்ல…!