27வது ஆண்டின் ஆப்பிள் உலகளாவிய உருவாக்குநர்கள் மாநாடு 2016 வாயிலாக ஆப்பிள் குழுமத்தில் 13 மில்லியன் பதிவு செய்யப்பட்ட உருவாக்குநர்கள் , 74 நாடுகளில் இருந்து 5000க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்க 72 சதவீதம் பேர் முதன்முறையாக பங்கேற்க 350 நபர்கள் உதவித்தொகை பெற்றுனர். 18 வயதுக்குள் மாநாட்டு அரங்கில் பங்குபெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 120 ஆகும்.
ஆப்பிள் மாநாட்டில் ஐஓஎஸ்10 , டிவிஓஎஸ் , மேக்ஓஎஸ் மற்றும் வாட்ச் ஓஎஸ் போன்றவை அறிமுகம் செய்யப்ப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முதற்கட்டமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 3யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மற்றும் மேம்படுத்தப்பட்ட சில வசதிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 3 சிறப்புகள்
புதிய வொர்க் அவூட் ஆப் ; ஆப்பிள் வாட்ச்ஓஎஸ் 3 யில் உச்சகட்ட சிறப்பு வசதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வொர்க் அவூட் ஆப்ஸ் வாயிலாக உடல் நலன் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஏக்டிவிட்டி ஷேரிங் வட்டத்தின் வாயிலாக குடும்பத்தினர் , நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள இயலும். மேலும் உங்கள் இதயதுடிப்பு மற்றும் குரல் வழி செய்தி அனுப்ப இயலும்.
பீரீத்தி ; புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பான உடல்நலனை பேனும் வகையிலான ஆழமான மூச்சு பயிற்சிகள் வாயிலாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்த இயலும்.
டாக் அவூட் வசதி ; பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ள பட்டனை அழுத்தினால் வாட்ச்சில் உள்ள ஆப்ஸ்கள் வரிசையாக வரும் என்பதனால் மிக இலகுவாக நமக்கு தேவையான ஆப்ஸ் பயன்படுத்தலாம்.
எஸ்ஓஎஸ் ; எமெர்ஜன்சி நேரங்களில் பக்கவாட்டில் உள்ள பட்டனை அழுத்தினால் நாம் எந்த இடத்தில் உள்ளோம் என்ன பிரச்சனை போன்ற விபரங்களுடன் அவசரகால உதவியை பெறவும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இந்த செய்தி கிடைக்கும்.
மேம்படுத்தப்பட்ட புதிய அறிவிப்புகள் வசதி வழங்கப்பட்டுள்ளது.