புதுசு என்ன : ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 3 WWDC2016

  ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய உருவாக்குநர்கள் மாநாடு 2016யில் ( worldwide developers conference -WWDC2016 )  பல நவீன வசதிகளை ஆப்பிள் நிறுவனம் வெளிப்படுத்தி வருகின்றது.

  27வது ஆண்டின் ஆப்பிள் உலகளாவிய உருவாக்குநர்கள் மாநாடு 2016 வாயிலாக ஆப்பிள் குழுமத்தில் 13 மில்லியன் பதிவு செய்யப்பட்ட உருவாக்குநர்கள் , 74 நாடுகளில் இருந்து 5000க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்க 72 சதவீதம் பேர் முதன்முறையாக பங்கேற்க 350 நபர்கள் உதவித்தொகை பெற்றுனர். 18 வயதுக்குள் மாநாட்டு அரங்கில் பங்குபெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 120 ஆகும்.

  ஆப்பிள் மாநாட்டில்  ஐஓஎஸ்10 , டிவிஓஎஸ் , மேக்ஓஎஸ் மற்றும் வாட்ச் ஓஎஸ் போன்றவை அறிமுகம் செய்யப்ப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முதற்கட்டமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 3யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மற்றும் மேம்படுத்தப்பட்ட சில வசதிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

  ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 3 சிறப்புகள்

  ஆப்பிள் வாட்ச் வேகம் அதிகரிப்பு ; முந்தைய வாட்ச் ஓஎஸ் 2 யை விட வாட்ச் ஓஎஸ் 3யில் மிக விரைவாக அதாவது முந்தைய மாடலை விட 7 மடங்கு வேகமாக ஆப்ஸ்களை செயல்பட வைக்கும். இதனால் உங்கள் விருப்பமான ஆப்ஸை விரைவாக பயன்படுத்த இயலும்.
  ஸ்க்ரிப்பிள் ; வாட்சுகளின் வாயிலாக மிக விரைவாக மெசேஜ் அனுப்பவதற்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆப்ஸ் வழியாக ஆப் டிரா மூலம் எழுத்துகளை வரைந்தாலே தானாக எழுத்துகளை எழுதி செய்தியாக அனுப்ப முடியும். ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் இந்த வசதி கிடைக்கும்.

  புதிய படங்கள் ; முந்தைய வாட்ச்ஓஎஸ் 2 சாதனத்தில் மிக்கி மவுஸ் படம் கடிகார நேரத்தினை காட்டி வந்தது. தற்பொழுது மின்னி மவுஸ் இணைந்துள்ளது. மேலும் டிஜிட்டல் டைம் மற்றும் படங்களை வைத்து கொள்ள முடியும்.

  புதிய வொர்க் அவூட் ஆப் ; ஆப்பிள் வாட்ச்ஓஎஸ் 3 யில் உச்சகட்ட சிறப்பு வசதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வொர்க் அவூட் ஆப்ஸ் வாயிலாக உடல் நலன் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஏக்டிவிட்டி ஷேரிங் வட்டத்தின் வாயிலாக குடும்பத்தினர் , நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள இயலும். மேலும் உங்கள் இதயதுடிப்பு மற்றும் குரல் வழி செய்தி அனுப்ப இயலும்.

  பீரீத்தி ; புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பான உடல்நலனை பேனும் வகையிலான ஆழமான மூச்சு பயிற்சிகள் வாயிலாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்த இயலும்.

  டாக் அவூட் வசதி ; பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ள பட்டனை அழுத்தினால் வாட்ச்சில் உள்ள ஆப்ஸ்கள் வரிசையாக வரும் என்பதனால் மிக இலகுவாக நமக்கு தேவையான ஆப்ஸ் பயன்படுத்தலாம்.

  எஸ்ஓஎஸ் ; எமெர்ஜன்சி நேரங்களில் பக்கவாட்டில் உள்ள பட்டனை அழுத்தினால் நாம் எந்த இடத்தில் உள்ளோம் என்ன பிரச்சனை போன்ற விபரங்களுடன் அவசரகால உதவியை பெறவும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இந்த செய்தி கிடைக்கும்.

  மேம்படுத்தப்பட்ட புதிய அறிவிப்புகள் வசதி வழங்கப்பட்டுள்ளது.

  NO COMMENTS

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  Exit mobile version