முக்கிய நிகழ்வுகளுக்கு ஃபிரெஷான பூக்களை அனுப்பி வைக்கும் வகையிலான சேவையை அமேசான் இந்தியா தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மும்பை , டெல்லி , புனே , பெங்களூரு மற்றும் ஹைத்திராபாத் நகரங்களில் அமேசான் Fresh Flowers Store திறக்கப்பட்டுள்ளது.

அமேசான் Fresh Flowers

இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் வழியாக பொருட்களை வாங்கும் கலாசாரம் அதிகரித்து வருகின்ற நிலையில் முன்னணி இணைய விற்பனை மையங்கள் பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருகின்றது. ஃபிரெஷாக பூக்களை நாம் விரும்பும் நபர்களின் முக்கிய நிகழ்வுகளுக்கு அனுப்பி வைக்கும் நோக்கிலே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் பூங்கொத்து , பூக்கூடை என பல்வேறு விதமான வகையில் 1500க்கு மேற்பட்ட வித விதமான பூக்களை இணையத்தில் பறிக்கலாம். இந்த பூக்களுடன் பிறந்தநாள் வாழ்த்து செய்தி , ஆண்டு விழா கொண்டாட்ட செய்திகளையும் அனுப்ப இயலும்.

சில மாதங்களுக்கு முன்னதாக அமேசான் மளிகை சாமான்களை 2 மணி நேரத்தில் வீட்டுக்கு டெலிவரி செய்யும் வகையிலான அமேசான் நவ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.