இன்று 2017 ஆம் ஆண்டின் பூமி தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து கூகுள் டூடுல் வெளியிடப்பட்டு அதில் பூமியை காக்க வேண்டிய சுவாரஸ்ய குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

பூமி தினம்

பூமியின் வடதுருவத்தின் வசந்த காலமும், தென்துருவத்தின் இலையுதிர் காலமும் ஏப்ரல் 22ந் தேதி ஒரே நாளில் ஆரம்பிக்கிறது. அதை மையப்படுத்தியே ‘பூமி தினம்’ கொண்டாடப்படுகிறது.

உலக பூமி தினத்தை முன்னிட்டு முன்னணி இணைய ஜாம்பவான கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் படத்தில் உலகை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற குறிப்புகளை படங்களாக இணைத்து வெளியிட்டுள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை விளக்கும் கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக ஆண்டுக்கு 5 வயதுற்கு உட்பட்ட  1.7 மில்லியன் குழந்தைகள் மரணமடைகின்றனர் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பூமி தின குறிப்புகள்

  1. அறையை விட்டு வெளியேறும் பொழுது மின் விளக்குகள் , விசிறிகள் போன்றவற்றை அனைத்து விடுங்கள்.
  2. குறைந்தபட்சம் ஒரு மரம் நட்டு பராமரியுங்கள்.
  3. வாரத்தில் ஒரு நாள் வாகனங்களை பயன்படுத்துவதனை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்.
  4. இயற்கை உணவுகளை உண்டு மாசு மற்றும் கழிவுகள் குறைக்க முயற்சி செய்யுங்கள்.