பேஸ்புக்கில் 360 டிகிரி கோணத்தில் போட்டோ மற்றும் வீடியோ கமென்ட் பதிவேற்றலாம்

  Ads
  சமூக வலைதளத்தில் முதன்மையான பேஸ்புக் 360 டிகிரி கோணத்தில் புகைப்படங்களை உங்கள் டைம்லைன் மற்றும் செய்தி ஊட்டல் ஆகியவற்றில் பதிவேற்றலாம்.

  360 டிகிரி கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , பனோரமிக் புகைப்படங்கள் போன்றவற்றை 360 டிகிரியில் பதிவேற்றும் வகையிலும் இதனை விரிச்சுவல் ரியாலிட்டி பெற்றுள்ள சாதனங்களில் கண்டு மகிழலாம்.

  360 டிகிரி போட்டோ பதிவேற்றும் வழிமுறைகள்

  1.சாம்சங் கேலக்சி மொபைல் போட்டோ ,ஆப்பிள் மொபைலில் பனோரமா புகைப்படங்கள் அல்லது 360 போட்டோ ஆப் அல்லது 360 கேமரா போன்றவற்றில் எடுத்த போட்டோகளை பதிவேற்றலாம்.

  2.  உங்கள் பேஸ்புக் டைம்லைன் அல்லது நியூஸ்ஃபீடில் உள்ள போட்டோஸ்/ வீடியோ என்பதனை தேர்வு செய்து புகைப்படத்தினை பதிவேற்றுங்கள்.

  3. புகைப்படத்தினை தரவேற்றிய உடன் 360 டிகிரி கோனத்தில் இயங்கும் போட்டோ எனில் அதில் காம்பஸ் ஐகான் தோன்றும்..பின்பு அதனை கிளிக் செய்து முழுஸ்கிரினில் கானலாம்.

  4. சாம்சங் கியர் விஆர் மொபைல்கள் போன்றவற்றில் விஆர் ஹெட்செட் பயன்படுத்தி 360 டிகிரிகோண வடிவிலான புகைப்பட அனுபவத்தினை பெறலாம்.

  சமீபத்தில் 360 டிகிரி கோண வீடியோ வசதியை வெளியிட்டிருந்தது. தற்பொழுது 360 டிகிரி கோணத்தில் போட்டோ பதிவு வசதியை தந்துள்ளது.

  பேஸ்புக் பதிவில் வீடியோ கமென்ட்ஸ்

  மேலும் பேஸ்புக் தளத்தின் போஸ்ட்களில் போட்டோ , டெக்ஸ்ட் , இமோஜி , ஸ்டிக்கர்ஸ் போன்றவற்றை கருத்துரையில் இடும் வசதி இருந்து வந்தது. தற்பொழுது கூடுதலாக வீடியோ வடிவில் கமெண்ட்ஸ்களை பதிவேற்றலாம்  ஆப்பிள் ஆப் , ஆண்ட்ராய்டு , வெப் பயனாளர்கள் என அனைத்திலும் இந்த வசதி சர்வதேச அளவில் கிடைக்க தொடங்கி உள்ளது. கமென்ட்ஸ் தெரிவிக்கும் பொழுது படத்தினை க்ளிக் செய்து வீடியோவினை அப்டேட் செய்யலாம்.