சமூக வலைதளங்களில் முதன்மை வகிக்கும் பேஸ்புக் நிறுவனர்  மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களின் டிவிட்டர் , பின்ட்ரிஸ்ட் கணக்குகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக 2012 ஆம் ஆண்டில் ஒருமுறை ஜூக்கர்பெர்க் லிங்க்டுஇன் கணக்கினை ஹேக் செய்துள்ளனர் . தற்பொழுது டிவிட்டர் மற்றும் பின்ட்ரிஸ்ட் கணக்குளை ஹேக் செய்துள்ளனர் . சாதரன மனிதர்கள் முதல் பெரும்புள்ளிகள் வரை தங்களுடைய கனக்குகளுக்கு சாதரன பாஸ்வோர்ட் பயன்படுத்துவதே ஹேக் செய்யபவர்களுக்கு எளிமையாகி விடுகின்றது.
அவர் மைன் டீம் எனப்படும் ஹேக்கர் குழு ஒரே சமயத்தில் பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்யின் டிவிட்டர் , பின்ட்ரிஸ்ட் கணக்குளை ஹேக் செய்து முடக்கியது.  சில மாதங்களுக்கு முன்னர் அவர் மைன் ஹேக்கர் குழு சில மில்லியன் லிங்குடுஇன் வாடிக்கையாளர்களின் பாஸ்வோர்டினை வெளியிட்டது.

டிவிட்டர் கனக்கினை 2012 முதல் பெரிதாக  ஜூக்கர்பெர்க் டிவிட்டர் பயன்படுத்தவில்லை எந்தொரு டிவிட்டும் செய்யாமல் இருந்தது. அதே போலவே  பின்ட்ரிஸ்ட் கணக்கும் பெரிதான எந்த செயல்பாடும் இல்லாமலே இருந்து வந்துள்ளது.
பாஸ்வோர்டு கவனிக்க வேண்டியவை என்ன ?
 பெயர் , மொபைல் என் , பிறந்த தேதி ,  மனைவி பெயர் , பிறந்த தேதி , நடிகர்கள் , நடிகைகள் பெயர் என இது போன்ற பாஸ்வோர்டுகளையே பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர் எனவே மிக எளிதாக ஹேக்கர்கள் கைகளில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மிக எளிதாக கிடைத்துவிடுகின்றது.

எனவே உங்கள் அனைத்து கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வோர்டு வைப்பதனை தவிர்த்து மிக கடினமான குறிசொல்லை பயன்படுத்தினால் பெரியளவிலான சேதராத்தினை தவிர்க்கலாம்..
 தற்பொழுது ஜூக்கர்பெர்க் டிவிட்டர் , பின்ட்ரிஸ்ட் கணக்குகள் மீட்கப்பட்டுவிட்டது. இந்த தகவலினை வென்ச்சர்பீட் வெளியிட்டுள்ளது. அவரின் பேஸ்புக் கனக்கு ஹேக் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.