உலக அளவில் விரைவாக மிகப்பெரிய டிரென்டிங்கை பெற்றுள்ள போக்கிமான் கோ ( Pokemon go) மொபைல் கேம்  நிண்டெண்டோ கிளாசிக் கேமிங் வடிவமைப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

போக்கிமான் கோ கேம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் - டாப் 10

ஒரு சில முக்கிய நாடுகளில் மட்டுமே வெளிவந்துள்ள போகிமோன் கோ கேம் அகில உலகிலும் புதிய டிரென்டிங் பெற்று சமூக வலைதளத்தை பின்னுக்கு தள்ளிவருகின்றது.

மேலும் படிக்க ; போக்கிமான்கோ கேம் விளையாடுவது எவ்வாறு ?

டாப் 10 – போக்கிமான் கோ கேம்

1. அமெரிக்கா ,ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து , மேலும் சில நாடுகளில் மட்டுமே அதிகாவப்பூர்வமாக கிடைக்கின்றது. 
2. அறிமுகம் செய்த 4 நாட்களில் அமெரிக்காவின் ஆப்பிள் ஐபோன் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்துள்ளது.
3. இந்தியாவில் அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவில்லை.. அடுத்த சில நாட்களுக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.
4. எதிர்கால மிகை யதார்த்தம் (Augmented reality) எனப்படும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள போக்கிமான் உங்களை வீதிகள் சுற்ற வைக்கும்.
5. ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாட ஏற்ற கேமாக அல்லாமல் உங்கள் உடல் உழைக்க வைக்கும் என்பதனால் அதிகம் நடை பயில தயாராகுங்கள்..
6. போக்கிமான் கேம் விளையாட கூகுள் மேப் வசதியை பெற்று உங்கள் தெருக்களில் போக்கிமானை தேடலாம்.
7. போக்கிமான் கோ கேம் சர்வர் அடிக்கடி செயலிழுந்து விடுவதாக கடந்த சில நாட்களாக புகார் எழுந்த வண்ணம் உள்ளளது.
போக்கிமான் கோ கேம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் - டாப் 10
8. பல புதுமையான விடயங்களை கொண்டுள்ள போக்கிமான் கோ கேமில் விளையாடு கொண்டிருந்த 19 வயது பெண் வீதிகளில் அருகில் உள்ள பகுதியில் போக்கிமானை தேடும்பொழுது இறந்தவரின் உடலை கண்டுபிடித்துளார்.
9. பெரும்பாலான சாலைகள் , வீதிகள் அனைத்திலும் போக்கிமானை தேடுவதனால் பல இன்னல்களை மக்கள் சந்திக்க தொடங்கியுள்ளனர்.
10. எண்ணற்ற அம்சங்களை கொண்டு செயல்படும் போக்கிமான் கோ கேம் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கேமாக விளங்கும்.
போக்கிமான் கோ கேம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் - டாப் 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here