2 கோடியே 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் TANGEDCO ஆப் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மின்சார கட்டணம் செலுத்த TANGEDCO ஆப் அறிமுகம்

TANGEDCO ஆப்

பெருகி வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் பல்வேறு சிறப்பு ஆப்களை அரசு அறிமுகம் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 2.7 கோடி மின் பயனாளர்கள் மிக எளிமையாக மின் கட்டணம் செலுத்தும் வகையில் டான்ஜெட்கோ ஆப் என்ற பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயிலி ஒன்றை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த செயிலியை பயன்படுத்துவதற்கு கூகுள் ப்ளே ஆப் வழியாக  TANGEDCO என தேடி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி வாயிலாக மிக இலகுவான மின் கட்டணத்தை செலுத்தலாம். இந்த செயலியை பயன்படுத்துவதற்கு முன் மின்சார வாரிய இணையதளத்தில் பயனீட்டாளர்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.

இந்த ஆப் வாயிலாக கட்டணம் செலுத்துவது, கட்டணத்தை கணக்கீடுவது உள்ளிட்ட பலன்களை பெறலாம். இதில் கட்டணம் செலுத்த நெட் பேங்க்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உள்ளிட்ட முறையில் செலுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here