2017 மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் (MWC 2017) அரங்கில் மீஜூ அறிமுகம் செய்துள்ள மீஜூ சூப்பர் எம்சார்ஜ் டெக்னாலஜி வாயிலாக முழுபேட்டரில் 20 நிமிடத்தில் முழுசார்ஜ் ஏறிவிடும் வகையில் இந்த பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீஜூ சூப்பர் எம்சார்ஜ் டெக்னாலஜி

3,000mAh பேட்டரி திறனை கொண்டுள்ள மின்கலத்தை 0 முதல் 100 சதவீத சார்ஜ் ஏறுவதற்கு வெறும் 20 நிமிடங்களில் ஏறிவிடும். செயல்பாட்டில் உள்ள க்வால்காம் குயீக்சார்ஜ் 3.0 சார்ஜரை விட மூன்று மடங்கு வேகத்தில் சார்ஜ ஏறும் திறனை கொண்டுள்ளது.

இந்த நுட்பம் ஐபோன் 7 பிளஸ் மாடல் சார்ஜிங் முறையை விட 11 மடங்கு வேகமானது மற்றும்  சாம்சங் கேலக்சி S7 எட்ஜ் சார்ஜிங் முறையை விட 3.6 மடங்கு கூடுதல் வேகமானதாக விளங்குகின்றது.

இந்த எம்சார்ஜ் டெக்னாலாஜி மீஜூ மொபைல்களில் விரைவில் இடம்பெற உள்ளது.