சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூரில் அமைந்திருந்த நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் தொழிற்சாலைகள் வரி பிரச்சனை  காரணமாக மூடப்பட்டது. மீண்டும் நோக்கியா மற்றும் ஃபாக்ஸ்கான் ஆலையை திறக்கப்படும் என ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

மீண்டும் சென்னை நோக்கியா தொழிற்சாலை - ஆளுநர் ரோசய்யா

15வது சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் திரு. ரோசய்யா உரையுடன் இன்று தொடங்கியது. இதில் பல அறிவிப்புகள்வெளியாகியுள்ள நிலையில் நோக்கியா ஆலை திறக்க முயற்சிக்கப்படும் என அறிவித்துள்ளார்

நோக்கியா நிறுவனத்தின் மொபைல் மற்றும் மென்பொருள்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்திய பின்னர் நோக்கியா சென்னை ஆலை மட்டும் வரி ஏய்ப்பு பிரச்சனயால் நோக்கியா வசமே இருந்து வருகின்றது.

மீண்டும் நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ள நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பால் மீண்டும் நோக்கியா சென்னை ஆலை செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டிய வரி ரூ.10,000 கோடி அளவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் திரு.மு.க ஸ்டாலின் கூறுகையில் இரு நிறுவனங்களும் வெளியேற காரணமே இந்த ஆட்சிதான் என எல்லாருக்கும் தெரியும். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதுபோல் இந்த ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது..

நோக்கியா தொழிற்சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தால் 12,000 பேர் நேரடியாகவும் மறைமுகமாக 20,000க்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here