மீண்டும் பழைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்…! புதிய ஸ்டேட்டஸ் தோல்வியா ?

Ads

சமீபத்தில் வாட்ஸ்அப் செயலில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் பெரிதாக பலரை கவராத நிலையில் தற்பொழுது உள்ள சோதனை பதிப்பில் மீண்டும் பழைய வாட்ஸ்அப் வசதி இடம்பெற்றுள்ளது.

புதிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

புதிதாக கடந்த மாதம் 24ந் தேதி அறிமுகம் படங்கள் , வீடியோ , GIF போன்றவற்றை வைக்கின்ற ஸ்டேட்டஸ் முறை 24 மணி நேரத்தில் மறைந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் இந்த ஸ்டேட்டஸ் ஸ்னாப்சாட் வசதியை போன்றதாக இருந்தது.

தற்பொழுது பீட்டா நிலையில் உள்ள புதிய பதிப்பு 2.17.95 ல் மீண்டும் பழைய வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளனர். முன்பு போலவே மூன்று புள்ளிகளை கொண்ட அந்த அடத்தில் About ஆப்ஷனில் அமைந்துள்ளது.

இது தற்பொழுது சோதனையில் உள்ளதால் அடுத்த சில வாரங்களில் புதிய அப்டேட்டில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கலாம். இது போன்ற செய்திகளுக்கு facebook.com/GadgetsTamilan Follow …பன்னுங்க..

Comments

comments