வருகின்ற மே 8ந் தேதி இந்தியாவில் நோக்கியா 3310 உள்பட நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 மொபைல்கள் இந்திய சந்தைக்கான மாடல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா 3310, நோக்கியா 3,5,6 மொபைல்கள் இந்தியா வருகை விபரம்

நோக்கியா 3,5,6 மொபைல்கள்

  • மே 8ந் தேதி நோக்கியா 3310 உள்பட நோக்கியா 3,5,6 மொபைல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
  • 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய பொலிவுடன் நோக்கியா 3310 செங்கல் செட் வந்துள்ளது.
  • ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுகின்ற ஸ்மார்ட்போன்களாக வந்துள்ளது.

நோக்கியா 3310, நோக்கியா 3,5,6 மொபைல்கள் இந்தியா வருகை விபரம்

உலகம் முழுவதும் கொடிகட்டி பறந்த நோக்கியா ஸ்மார்ட்போன் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஆண்ட்ராய்டு ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கிய பொழுது சந்தையில் மதிப்பிழந்த நிலையில் தற்பொழுது ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் கீழ் நோக்கியா பிராண்டில் புதிய மொபைல்கள் 2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் வாயிலாக வெளியிடப்பட்டது.

மூன்று ஸ்மார்ட்போன்களாக நோக்கியா 3 , நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகியவை வெளிடப்பட்டிருப்பதுடன் கூடுதலாக ஃபீச்சர் ரக மொபைல் மற்றும் கிளாசிக் புகழ் மாடலான செங்கல் செட் என அழைக்கப்படுகின்ற நோக்கியா 3310 மொபைல் மீண்டும் பழைய தோற்ற அமைப்பிலிருந்து புதிய பொலிவெடுத்து விற்பனைக்கு வெளிவந்துள்ளது.

 

சர்வதேச அளவில் ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா இந்தியாவில் ஜூன் மாத இறுதிக்குள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில் மே 8, 2017 அன்று நமது நாட்டுக்கான நுட்ப விபரங்களை கொண்ட மாடல்களை நோக்கியா வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

நோக்கியா 3310, நோக்கியா 3,5,6 மொபைல்கள் இந்தியா வருகை விபரம்

நோக்கியா மொபைல்கள் விலை பட்டியல்

  • நோக்கியா 3310 – ரூ.3800
  • நோக்கியா 3 – ரூ. 9500
  • நோக்கியா 5 – ரூ.13,250
  • நோக்கியா 6 – ரூ. 16,000

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற விலையை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here