மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய விண்டோஸ் 10 S இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் ஒன்றை விற்பனைக்கு வெளிப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம் - முழுவிபரம்

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப்

  • புதிய மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் விலை $999 (ரூ.64,100)
  • விண்டோஸ் 10 S இயங்குதளத்தில் செயல்படுகின்றது.
  • மிக சிறப்பான அம்சங்களில் ஒன்றாக 14.5 மணி நேரம் பேட்டரி திறனை பெற்றதாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம் - முழுவிபரம்

ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வின்டோசு 10 S இயங்குதளத்தில் செயல்படும் வகையிலான மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் $999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப் மிக சிறப்பான தரத்தில் வடிவமைக்கப்பட்டு நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன் 13.5 இன்ச் பிக்சல்சென்ஸ் தொடுதிரை கொண்ட எல்சிடி டிஸ்பிளே பெற்று 1080p தீர்மானத்துடன் இன்டெல் கோர் ஐ5 பெற்று 4GB ரேம் மற்றும் 128GB SSD சேமிப்பு வசதியை அடிப்படையாக கொண்டிருப்பதுடன் மேலும் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் கூடுதல் சேமிப்பு பெற்ற வசதிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம் - முழுவிபரம்

சர்ஃபேஸ் லேப்டாப் பிரிவுகள்

இன்டெல் கோர் i5 மற்றும் i7 பிராசஸர்களில் அதிகபட்சமாக 512GB வரையிலான சேமிப்பு வசதியை பெற்றிருக்கும். முழு வேரியன்ட் விபரம் பின் வருமாறு;-

  • இந்த லேப்டாப் ஆரம்ப விலை $999 (Rs 64,000) இதில் இன்டெல் கோர் i5 , 4ஜிபிரேம் மற்றும் 128GB சேமிப்பு வசதி இருக்கும்.
  • அடுத்த i5 மாடலில் 8GB மற்றும் 256GB மெமரி பெற்றிருப்பதுடன் இதன் விலை $1299 (Rs 83,200).
  • இன்டெல் கோர் i7 மாடலின் ஆரம்ப விலை $1599, (Rs 1,02,00) இதில் 8GB மற்றும் 256GB சேமிப்பு கொண்டிருக்கும்.
  • உயர் ரக 512GB சேமிப்பு வசதியுடன் 16GB ரேம் பெற்ற மாடலின் விலை $2199 ( Rs 1,41,000)

மேலும் இந்த சர்ஃபேஸ் லேப்டாப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமாக 14.5 மணி நேரம் வரை செயல்திறனை வெளிப்படுத்தும் பேட்டரியை பெற்றுள்ளது. மேலும் லேப்டாப் சூடாவதை தடுக்கும் வகையில் டிசைன் அமைப்புகளை கொண்டதாக இந்த மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் விளங்குகின்றது.

பிளாட்டினம் , கோல்டு , புளூ மற்றும் புவுர்கன்டி என 4 விதமான நிறங்களில் கிடைக்கின்ற இந்த லேப்டாப் முதற்கட்டமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெற முன்பதிவு செய்ய microsoftstore.com அல்லது BestBuy.com.தளத்தை பயன்படுத்தலாம்.

இந்தியா வருகை குறித்து எந்த அதிகார்வப்பூர்வ தகவலும் இல்லை. இந்த மடிக்கனிணி ஜூன் 15ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்படஉள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here