ரூ. 24,999 விலையில் மைக்ரோமேக்ஸ் டூயல் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 13MP +13MP டூயல் கேமராவை பின்புறத்தில் பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ் டூயல் 5

  • இரண்டு 13 மெகாபிக்சல் கேமராவை பின்புறத்தில் டூயல் 5 ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
  • ரூ. 24,999 விலையில் மைக்ரோமேக்ஸ் டூயல் 5 விற்பனைக்கு வெளியிடப்பட்டுளள்ளது.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 MSM8976 SoC பிராசஸருடன் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லா 6.0.1 இயங்குதளத்தில் செயல்படுகின்ற டூயல் 5 ஸ்மார்ட்போனில் 5.5 இஞ்ச் முழுஹெச்டி 1080 பிக்சல் AMOLED திரையுடன், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினை பெற்றிருப்பதுடன் , குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 MSM8976 SoC பிராசஸருடன் 4GB வசதியை பெற்று விளங்குகின்றது.

டூயல் 5 ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் அமைந்துள்ள இரண்டு 13MP +13MP மிக சிறப்பான படங்களை வெளிப்படுத்தும் வகையில் உதவும் 1.12-micron பிக்சல் சோனி IMX258 சென்சார் இடம்பெற்றுள்ளது. 4K வீடியோ மற்றும் 3D படங்களை பதிவு செய்யலாம். முன்புறத்தில் மிக சிறப்பான செல்ஃபீ படங்களை பெறும் வகையில் 13MP கேமரா சிறப்பான படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை பெறும் வகையில் வந்துள்ளது.

128GB உள்ளடங்கிய மெமரியுடன் கூடுதலாக 128GB வரையிலான மெமரியை அதிகரிக்க மைக்ரோஎஸ்டி அட்டையுடன் பெறலாம், 3,200mAh பேட்டரியுடன் மைக்ரோமேக்ஸ் டூயல் 5 மொபைலுடன் மிகவேகமாக க்யூக்சார்ஜ் 3.0 ஆப்ஷனை பெற்றுள்ள இந்த கருவியின் 95 சதவீத சார்ஜ் ஏற 45 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். 4 மணி நேரத்துக்கு தேவையான சார்ஜ் ஏற 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

பின்புறத்தில் இரு கேமராக்கு கீழாக கைரேகை சென்சார் ஆப்ஷனுடன் 4G, VoLTE, வை-ஃபை, ப்ளூடூத், ஹைபிரிட் சிம் ஸ்லாட் மற்றும் யூஎஸ்பி டைப் சி போன்றவற்றை பெற்றுள்ளது. வருகின்ற ஏப்ரல் 10ந் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் தளத்திலும் மேலும் கடைகளிலும் விற்பனை கிடைக்கும்.