ரூ. 7,499 விலையில் 6 அங்குல திரையுடன் மைக்ரோமேக்ஸ் மெகா 2 பிளஸ் மொபைல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் மெகா 2 பிளஸ்
இந்தியாவை சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய மெகா 2 பிளஸ் மொபைல் 960×540 (QHD) பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.0 இன்ச் திரையை கொண்டுள்ளது. 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் வாயிலாக 2ஜிபி ரேம் உடன் செயல்படுகின்றது.
16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் கூடுதல் சேமிப்புக்கு மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை அதிகரிக்கலாம். இந்த மொபைலில் ஆட்டோஃபோகஸ், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா பெற்றுள்ளது.
3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi உடன் ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், HSPA, HSPA+, 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ, 3ஜி, 4ஜி எல்டிஇ , VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் மெகா 2 பிளஸ் நுட்பம்
- 6 இன்ச் ( 960×540) டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட் கோர் பிராஸசர்
- 2GB ரேம் 16GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow)
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G VoLTE
- 3000mAh பேட்டரி