ரூ.4,499 விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் விடியோ 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4.5 அங்குல திரையுடன் ஸ்பார்க் விடியோ மொபைல் வந்துள்ளது.

4ஜி ஆதரவுடன் மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் விடியோ மொபைல் அறிமுகம்

 

 மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் விடியோ

  • ரூ. 4,499 விலையில் 4.5 அங்குல FWVGA திரையுடன் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது.
  • 1GB ரேமுடன் 8ஜிபி உள்ளடங்கிய மெமரியை பெற்றதாக வந்துள்ளது.
  • VoLTE சிறப்பம்சத்தையும் வழங்குகின்றது.
  • 5MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனுடன் வந்துள்ளது.

ஸ்பார்க் விடியோ 4G ஸ்மார்ட்போனில் 4.0 அங்குல FWVGA திரையுடன் 854×480 பிக்சல் தீர்மானத்தை பெற்றிருப்பதுடன் 1.31GHz க்வாட் கோர் பிராசஸருடன் இணைந்த 1GB ரேம் பெற்றுள்ளது.

8GB  உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் அதிகபட்சமாக 32GB வரையில் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக பெறலாம். ஸ்பார்க் விடியோ மொபைலில் 5MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனுடன் அமைந்திருக்கின்ற நிலையில் முன்புறத்தில் 2MP  கேமரா இடம்பெற்றுள்ளது. 1800mAh பேட்டரி திறனை பெற்று விளங்குகின்றது.

இந்த கருவியில் கூடுதல் விருப்பங்களாக 4G, வை-ஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் வசதியை பெற்றுள்ளது.

ரூ.4,499 விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் விடியோ மொபைல் ஸ்னாப்டீல் வழியாக இன்று முதல் (24/03/17) கிடைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here