இந்திய மொபைல் சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 26 சதவித சந்தை மதிப்புடன் சாம்சங் முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் சியோமி நிறுவனமும் உள்ளது.

மொபைல் விற்பனை

  • முதல் காலண்டில் ஸ்மார்ட்போன் சந்தை அபரிதமான வளர்ச்சியை பெற்றுவருகின்றது.
  • ஐடெல் மொபைல் நிறுவனம் 9 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது.
  • மொபைல் விற்பனையில் இந்தியாவின் மைக்ரோமேஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Q1 2017 எனப்படும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் சாம்சங் நிறுவனம் 26 சதவீத சந்தை மதிப்புடன் தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான கைபேசி தயாரிப்பாளராக விளங்குகின்றது.

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் சந்தையின் மதிப்பு தொடர்ந்து சரிவை நோக்கி பயணித்து வருகின்றது. முதல் காலாண்டு முடிவில் 8 சதவித சந்தையை மட்டுமே பெற்று உள்ளது. இதே காலத்தில் சீனாவின் டெக்னோ மொபைல் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஐடெல் மொபைல் நிறுவனம் 9 சதவித வளர்ச்சி பெற்று இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளது. கடந்த காலாண்டில் 5.2 மில்லியன் மொபைல்களை விற்பனை செய்துள்ளது.

மூன்றாவது இடத்தில் ஜியோமி நிறுவனம் 7 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து விவோ 6 சதவீத பங்களிப்பும் மற்ற நிறுவனங்கள் 44 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளதாக ஷிப்மெண்ட் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் தகவலை கவுன்டர்பாயின்ட் வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தை

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் 4ஜி சேவையை பெறும் வகையிலான LTE நுட்பங்களை கொண்ட மொபைல் விற்பனை அபரிதமான வளர்ச்சியை பெற்று வருகின்றது.

விற்பனை ஆகின்ற 96 சதவீதம் ஸ்மார்ட்போன்களில்  வோல்ட்இ வசதி அடிப்படையாக உள்ளதாகவும் , 10க்கு 8 மொபைல்களின் திரை அதிகபட்சமாக 5 அங்குலத்தையும் , விற்பனை செய்யப்படுகின்ற 5ல் 4 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலே தயாரிக்கப்படுகின்றதாம்.

சாம்சங் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தை பெற்று 26 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளதை தொடர்ந்து ஜியோமி நிறுவனம் 13 சதவித பங்களிப்பை பெற்றிருக்கின்றது.

செல்ஃபீ மொபைல்கள்

கவுன்டர் பாயின்ட் அறிக்கையில் செல்ஃபீ சார்ந்த மொபைல் போன் விற்பனை கடந்த  ஆண்டுடன் ஒப்பீடுகையில் 9 சதவித வளர்ச்சி பெற்றுள்ளது. சீனாவின் ஓப்போ மற்றும் விவோ மொபைல்கள் செல்ஃபீ கேமரா பிரிவில் அபரிதமான வளர்ச்சியை பெற்று வருகின்றது.