மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவில் பல்வேறு மாற்றங்களுடன் கூடுதலான வேகம் மற்றும் குறைவான மெமரியுடன் இயங்கும் வகையில் புதிய ஃபயர்ஃபாக்ஸ் 54-வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ்

பிரசத்தி பெற்ற உலாவிகளில் ஒன்றான மோசில்லா ஃபயர்ஃபாக்ஸ் முந்தைய பதிப்புகளில் மிக குறைவான வேகம் மற்றும் அதிகப்படியான நினைவகத்தை பெற்று வந்த நிலையில் முதன்முறையாக முற்றிலும் ஃபயர்ஃபாக்ஸ் வரலாற்றில் சிறந்த வகையில் மாற்றியமைக்கப்பட்ட அம்சங்களுடன் அசத்தலாக வெளியாகி ஆச்சிரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னை முற்றிலும் மேம்படுத்தி கொண்டுள்ள புதிய பதிப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் இணைக்கப்படிருப்பதுடன் மற்ற பிரசவுசர்களை காட்டிலும் மிக வேகமாக செயல்படும் வகையில் E10s  அதாவது எலக்ட்ராலிசஸ் என்பதின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

20 க்கு மேற்பட்ட டேப்கள் திறக்கப்பட்டிருந்தாலும் மற்றவற்றுடன் ஒப்பீடுகையில் குறைவான மெமரி மற்றும் வேகம் குறையாமலும் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஃபயர்ஃபாக்ஸ் ஒற்றை நிகழ்வு பெற்று பல டேப்களை பெறும் பொழுது ஒவ்வொரு டேபிற்கு 2.5Mb வரை எடுத்து வந்த நிலையில் தற்போது 4 நிகழ்வு முறை பெற்றுள்ளதால் மிக வேகமாக செயல்படுவதாக ஃபயர்ஃபாக்ஸ் உறுதியளிக்கின்றது.

இந்த வருடத்தின் இறுதிக்குள் மேலும் மிக இலகுவாகவும், வேகமாக இயங்கும் வகையில் முற்றிலும் மேம்படுத்தும் என தனது பதிவில் மோசில்லா குறிப்பிட்டுள்ளது.