லெனோவா நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற மோட்டோரோலா பிராண்டில் புதிதாக பட்ஜெட் விலையில் மோட்டோ C என்ற பெயரில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் விலையில் மோட்டோ C மொபைல் வருகையா ?

மோட்டோ C

  • புதிய பட்ஜெட் விலை பிராண்டாக மோட்டோ சி மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
  • 5 இன்ச் FWVGA திரையுடன் 480×854 பிக்சல் தீர்மானத்தை பெற்றதாக வரவுள்ளது.
  • இதில் 1GB ரேம் மற்றும் 16 GB வரையிலான மொபைல் மெமரி ஆப்ஷன் வழங்கப்படலாம்.

புதிதாக வெளிவந்துள்ள படங்களில் மோட்டோ சி மொபைல்களின் வண்ணங்கள் மற்றும் சில முக்கிய டிசைன் அம்சங்கள் வெளியாகியுள்ளது. விற்பனையில் உள்ள மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்ற தோற்ற அமைப்பை பெற்றுள்ள புதிய மாடல்களில் பின்புற கேமரா அமைப்பும் ஜி5 போன்றே கொடுக்கப்பட்டுள்ளது. கருப்பு , சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வரவுள்ளது.

5 இன்ச் FWVGA திரையுடன் 480×854 பிக்சல் தீர்மானத்தை பெற்றிருப்பதுடன், மீடியாடெக் MT6737M பிராசஸர் பெற்று 1GB ரேம் உடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 16 ஜிபி வரையிலான மொபைல் சேமிப்பு வசதியுடன் கூடுதலாக 32ஜிபி வரையில் சேமிப்பை அதிகரிக்க மைக்ரோஎஸ்டி ஆப்ஷன் இடம்பெறலாம்.

கேமரா பிரிவில் பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், ஆட்டோஃபோகஸ் போன்றவற்றை பெற்ற 5 மெகாபிக்சல் கேமராவை பெற்றிருக்கும். முன்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா பெற்றதாக வரலாம்.

ரிமூவெபிள் வகையிலான 2300mAh பேட்டரியை பெற்றதாக 4ஜி ,4ஜி வோல்ட்இ , போன்ற ஆதரவுகளை கொண்டதாக வரலாம் என எதிர்பார்க்கப்படும் , இந்த பட்ஜெட் விலை மோட்டோ சி மொபைல் ரூபாய் 4000 முதல் ரூபாய் 5500 விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here