மோட்டோ E4, மோட்டோ E4 பிளஸ் ஸ்மார்ட்போன் விபரம் வெளிவந்தது

மோட்டோரோலா மொபைல் நிறுவனத்தின் அடுத்த வரவுள்ள புதிய மாடல்களில் மோட்டோ E4, மோட்டோ E4 பிளஸ் மாடல்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.

மோட்டோ E4

  • மோட்டோ ஈ4 ஸ்மார்ட்போனில் 5 அங்குல திரை இடம் பெற்றிருக்கலாம்.
  • மோட்டோ ஈ4 பிளஸ் மொபைலில் 5.5 அங்குல திரை இடம் பெற்றிருக்கலாம்.
  • இதில் 2GB அல்லது 3GB ரேம் ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.

இரு ஸ்மார்ட்போனிலும்  மீடியாடெக் MT6737M SoC பிராசஸருடன் கூடிய 2GB அல்லது 3GB ரேம் ஆப்ஷன் பெற்றிருப்பதுடன் மோட்டோ இ4 பிளஸ்13 மெகாபிக்சல் கேமரா, மோட்டோ இ4 கருவில் 8மெகாபிக்சல் கேமரா பின்புறத்திலும், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்கும்.

இரு மொபைல்களிலும்16ஜிபி இன்ட்ரனல் மெமரி வசதியுடன் 128ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டை பொருத்தப்படும் வாய்ப்புகள் உள்ளது.மேலும் பேட்டரி ஆப்ஷனில் மிக சிறப்பான வகையில் 2800mAh திறன் பெற்றதாக விளங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மோட்டோ இ4 எதிர்பார்க்கப்படும் விலை ரூபாய் 10500, மோட்டோ இ4 பிளஸ் விலை ரூ.13,500 ஆக இருக்கலாம்.

 

Recommended For You