உலகின் முன்னணி வீடியோ தளமான யூடியூப் புதிதாக யூடியூப் டிவி சேவையை அமெரிக்காவில் தொடங்கியுள்ளது. யூடியூப் டிவி சேவையில் உள்ளூர் சேனல் முதல் உலக பிரசத்தி பெற்ற சேனல்கள் வரை வழங்க திட்டமிட்டுள்ளது.

யூடியூப் டிவி

 • கேபிள் டிவி சேனல்களை நேரலையாக இணைய உதவியுடன் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
 • முதற்கட்டமாக அமெரிக்காவில் இணையதள டிவி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 • 39 டிவி சேனல்கள் $35 விலையில் வழங்கப்பட்டுள்ளது.

கேபிள் மற்றும் டிடிஎச் ஒளிபரப்புக்கு சவாலாக இணையத்தின் வாயிலாக நேரலை தொலைக்காட்சி சேவையை கண்டு களிக்கும் வகையில் மாற்றாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை ஆண்ட்ராய்டு , ஐபோன் , க்ரோம்கேஸ்ட் மற்றும் ஆண்ட்ராய்டு டிவிகளில் பெறலாம்.

மேலும் படிக்க – குறைந்த டேட்டாவில் வீடியோ காண யூடியூப் கோ

 • அமெரிக்காவின் சிகாக்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் , சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
 • பொழுதுப்போக்கு , செய்திகள் , ஸ்போர்ட்ஸ் மற்றும் கிட்ஸ் என பல முன்னணி பிரிவுகளில் சேனல்கள் வழங்கப்பட்டுள்ளது.
 • முதற்கட்டமாக 30 நாட்கள் இலவச சேவை வழங்கப்படுகின்றது
 • இஎஸ்பிஎன் ,ஃபாக்ஸ் , டிஸ்னி , நேட் ஜியோ உள்பட 39 சேனல்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டு அமெரிக்க டாலர் மதிப்பில் $ 35  (ரூ.2250) வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சேனல்களை பெற அட்-ஆன் வசதியும் வழங்கப்படுகின்றது.
 • ஒரே மெம்பர்ஷீப் கணக்கை கொண்டு குடும்பத்தினர் , நண்பர்கள் , உறவினர்கள் என மொத்தம் 6 நபர்கள் இந்த சேவையை பெறலாம்.
 • எந்த நிகழ்ச்சியை வேண்டுமானலும் சேமித்து கொள்ளும் வகையிலான வசதியை யூடியூப் டிவி சேவை வழங்குகின்றது. வரம்பற்ற சேமிப்பை கொண்டு எந்த நிகழ்ச்சியையும் சேமிப்பதுடன் அதனை 9 மாதங்கள் வரை வைத்திருக்கலாம்
 • இந்த சேவையில் விளம்பரங்களையும் ஒளிபரப்ப கூகுள் திட்டமிட்டுள்ளது.
 • 1080 பிக்சல் தீர்மானத்தில் நேரலை சேனல்களை வழங்க தொடங்கியுள்ள யூடியூப் டிவியில் 4K தர வீடியோ வசதி பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அடுத்த சில மாதங்களில் சர்வதேச அளவில் பல நாடுகளில் அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளதால் இந்தியாவிலும் யூடியூப் டிவி கிடைக்க பெறலாம்..

தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை வாசிக்க பின்தொடருங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் (Gadgets Tamilan)

facebook.com/gadgetstamilan