தமிழகத்தின் அடுத்த அரசியல் ஆடுகளத்தின் ரஜினி , கமல் மிகப்பெரிய சவாலாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஜினி ரசிகர்கள் சார்பாக ரஜினி பேரவை இணையதளம் மற்றும் செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரஜினி பேரவை

ரஜினி பேரவை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி மற்றும் கருத்துக்களை ரசிகர்கள் சுதந்திரமாக பதிவேற்றும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது இணையதளம் மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு சிறப்பு செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இணையதள பக்கத்தில் பாபா முத்திரை பின்புலமாக வழங்கப்பட்டு கீழே உள்ள வாசகம் இடம்பெற்றுள்ளது.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்குடி!

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இது நமது மக்கள் பணிக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட ஆக்கப்பூர்வ சேவை. நமதுஆடியோ, வீடியோ மற்றும் உரை சம்பந்தமான தொகுப்புக்களை இங்கே பார்க்கவோ, கேட்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியும். தங்களது கருத்துக்களை நீங்கள் இங்கு எழுதி வைக்கவோ, பகிர்ந்து கொள்ளவோ செய்யலாம். எமது ஊடக மேலாண்மைக்குழு தங்களது கருத்துக்களை தொடர்ந்து கண்காணித்து, ஆராய்ந்து முடிந்தவரையில் உரிய பதிலை தங்களுக்கு வழங்கும். நமது இந்த முயற்சி வெற்றி பெற உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

நன்றி! வணக்கம்!

இணையதள முகவரி – > http://www.rajiniperavai.org/

ஆண்ட்ராய்டு பயனாளர்கள் – > https://play.google.com/store/apps/details?id=com.carotechs.rajiniperavai&hl=en

ஆப்பிள் பயனாளர்கள் ->