சியோமி நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரெட்மி 4ஏ மொபைல் உள்பட பவர்பேங்க் மற்றும் வை-ஃபை ரிப்பிட்டர் 2 போன்றவை ரூ.1 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

மூன்றாவது ஆண்டு சியோமி

சீனாவின் சியோமி இந்தியா வருகையின் மூன்றாவது ஆண்டை முன்னிட்டு ரூ. 1 விலையில் மொபைல், பவர்பேங்க் மற்றும் வை-ஃபை ரிப்பிட்டர் 2  விஆர் ப்ளே போன்றவற்றை குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்ய உள்ளது.

ஜூலை 20 ந் தேதி வியாழன் மற்றும் 21 ந் தேதி  வெள்ளி காலை 11 மணிக்கு 10 ரெட்மி 4ஏ மொபைல் உள்பட 25 பவர்பேங்க் மற்றும் 15 வை-ஃபை ரிப்பிட்டர் 2 விற்பனை செய்யப்பட உள்ளது.

ஜூலை 20 ந் தேதி வியாழன் மற்றும் 21 ந் தேதி வெள்ளி பகல் 1 மணிக்கு 10 ரெட்மி 4 மொபைல் உள்பட 25 வீஆர் ப்ளே மற்றும் 15 செல்ஃபீ ஸ்டிக் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆக்செரிஸ்கள் தள்ளுபடி

ரூ. 50 முதல் ரூ.300 வரை பவர்பேங்க், வை-ஃபை ரிப்பிட்டர் 2,  செல்ஃபீ ஸ்டிக், வீஆர் ப்ளே மற்றும் இயர்போன்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றது.

மீ மேக்ஸ் 2

நேற்று சியோமி நிறுவனம் சியோமி மி மேக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, மேலும் இந்த ஆண்டு விழாவில் மி மேக்ஸ் 2 சிறப்பு விற்பனை ஜூலை 20 காலை 10 மணிக்கு  நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர ரெட்மி 4, ரெட்மி 4ஏ, மற்றும் ரெட்மி நோட் 4 போன்றவை பகல் 12 மணிக்கு விற்பனைக்கு கிடைக்கும்.

சலுகைகள் மற்றும் கூப்பன்

ரூ. 2000 மதிப்புள்ள GoIbibo உள்நாட்டு ஹோட்டல் புக்கிங் கூப்பன், ரூ.8.000 க்கு மேற்பட்ட முறையில் வாங்கும் எஸ்பிஐ அட்டை பயனர்களுக்கு ரூ.500 வரை கேஸ்பேக் கிடைக்கின்றது.

வாங்குவது எப்படி ?

கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். http://event.mi.com/in/3rdanniversary