தமிழக அரசின் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை டிராய் வழங்கியதை தொடர்ந்து ரூ.125 கட்டணத்தில் 200 சேனல்கள் மற்றும் இலவசமாக செட் டாப் டாக்ஸ் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

அரசு கேபிள் டிவி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றான அரசு கேபிள் டிவி சேவையில் டிஜிட்டல் உரிமம் கோரி விண்ணப்பம் மத்திய அரசின் தொலை தொடர்பு ஆணையமான டிராய்-க்கு வழங்கப்பட்ட பல ஆண்டுகள் கழித்து, கடந்த மாதம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக அரசு கம்பிவட தொலைக்காட்சி  மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:

தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக மிக சவாலான சேவையை வழங்கும் வகையில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றதை தொடர்ந்து கடந்த 6-05-2017 அன்று 75 லட்சம் ‘செட்டாப் பாக்ஸ்’ கொள்முதல் செய்வதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

டிராய்

கேபிள் வாடிக்கையாளர்களுக்கு 130 ரூபாயில் மாதந்திர கட்டணத்தில் குறைந்தது 100 சேனல்கள் தர வேண்டும், அதற்கு மேல் சேனல்களை பார்க்க விரும்பினால் கூடுதல் செலவு செய்து அதிக சேனல்களை பெறலாம் என டிராய் விதிமுறை உள்ளது.

எனவே,இதன் அடிப்பையிலே வாடிக்கையாளர்களுக்கு ரூ.130 கட்டணத்துக்குள் அதாவது ரூ.125 கட்டணத்தில் 200 தொலைக்காட்சிகளை வழங்க திட்டமிட்டு வருகின்றது.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழங்கப்படும். இதற்காக இக்கட்டுப்பாட்டு அறையின் எம்பிஇஜி2 (MPEG2) தொழில் நுட்பம், எம்பிஇஜி4 (MPEG4) ஆக உயர்த்தப்படும்.

இந்நிறுவனத் தின் டிஜிட்டல் சிக்னல் ரெயில் டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறு வனங்களின் ஃபைபர் கேபிள் வாயிலாக வழங்கப்படும். இந்நிறு வனத்தின் டிஜிட்டல் சிக்னலை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரெயில்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் இணைப்பகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் விரைவில் செட்டாப்பாக்ஸ்கள் விநி யோகிக்கப்படும். இந்த சேவை மூலமாக 200 சேனல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது , என அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் கூறியுள்ளார்.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் தேர்தல் அறிக்கையில் செட்டாப் பாக்ஸ்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ள அரசு விழாவில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி, நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை, இயக்கி வைக்கிறார். மேலும் ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 பேருக்கு, இலவச, ‘செட்-டாப் பாக்ஸ்’களை, அவர் வழங்குகிறார்.

சேனல்கள் மற்றும் கட்டண விபரம்

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களை நேரில் சந்தித்து, வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தினை (Customer Acquisition Form – CAF)) பூர்த்தி செய்து, செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, அதற்கு இணைப்பு கொடுப்பது.

மேலும், அதனை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள ஏதுவாக, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ஒவ்வொரு இணைப்பிற்கும் ரூ. 200/- ஒரு முறை செயலாக்கத் தொகையாக சந்தாதாரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள
அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

முழுமையான சேனல் லிஸ்ட் விபரத்தை அறிய இங்கே க்ளிக் செய்க –>  http://www.tactv.in/pdf/300-SD-channels.pdf