உலக பிரசத்தி பெற்ற மற்றும் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ஆயிரம் ரூபாய் விலையில் ஆன்லைன் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

ரூ.15,000 விலையில் ஆப்பிள் ஐபோன் வருமா ?

ஆப்பிள் ஐபோன் 5S

ஐபோன் 10வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு மிகவும் ஸ்பெஷலான ஐபோன் 8 மாடலை சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் மிகவும் சவாலான பட்ஜெட் விலையில் மொபைல் வாங்குபவர்களுக்கு எதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் நான்கு ஆண்டுகள் பழைய ஐபோன் 5S மாடலை ஆன்லைனில் மட்டும் ரூ.15,000 என்ற விலையில் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

ரூ.15,000 விலையில் ஆப்பிள் ஐபோன் வருமா ?

தற்சமயம் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆரம்ப தொகையாக உள்ள ஐபோன் 5எஸ் மாடலின் 18,000 என்ற விலையில் இருந்து ரூ.3000 வரை  குறைக்கப்பட்டு ரூ 15000 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

கடந்த முதல் காலாண்டில் 158% வளர்ச்சியை பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள 15000 முதல் 20000 வரையிலான சந்தையில் சியோமி, லெனோவோ, மோட்டோரோலா, ஒப்போ, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களடன் மிக எளிதாக போட்டியை ஏற்படுத்தவும், பலரின் ஐபோன் கணவு நிறைவேற வாய்ப்பாக அமையும் என எதிர்பர்க்கப்படுகின்றது.

பெங்களூருவில் தயாரிக்கப்பட உள்ள ஐபோன்கள் சந்தைக்கு அறிமுகம் செய்யப்படும் பொழுது இந்த விலை சாத்தியமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here