ரூ.1999 விலையில் 4G VoLTE ஆதரவுடன் மைக்ரோமேக்ஸ்  பாரத் 1 ப்யூச்சர் மொபைல் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ளது.

ரூ.1999 விலையில் 4ஜி மைக்ரோமேக்ஸ் பாரத் 1 ப்யூச்சர் மொபைல் வருகை

 பாரத் 1

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக சந்தையில் சிறப்பான வரவேற்பினை எட்டியிருந்த சீன மொபைல்களின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் சந்தையிலிருந்து பின்னுக்கு தள்ளப்பட்டது.

மீண்டும் சந்தைக்கு பல்வேறு மொபைல்களை பட்ஜெட் விலையில் கூடுதல் அம்சங்களை கொண்ட மொபைல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக பாரத் 1 என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது.

பாரத் ஒன்  ஃப்யூச்சர் மொபைலில் 1ஜிபி ரேம் அல்லது 512எம்பி ரேம் பெற்றதாக விளங்க உள்ள இந்த கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரி ஆப்ஷனுடன் கூடுதலாக 32ஜிபி வரையிலான வசதியுடன் மைக்ரோ எஸ்டி காரிடினை பெற்றிருக்கும். மேலும் இந்த மொபைலில் 2எம்பி பின்புற கேமராவினை பெற்றிருப்பதுடன் 4ஜி VoLTE ஆதரவினை பெற்றிருப்பதாக வரவுள்ளது.

பாரத் 2

ரூ.3000 விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ள பாரத் 2 ஸ்மார்ட்போன் மாடலும்  4ஜி VoLTE ஆதரவினை பெற்றதாக வரவுள்ளது. இந்த கருவியில் 1ஜிபி ரேம் பெற்றதாக விளங்க உள்ள இந்த கருவியில் 16 ஜிபி இன்டர்னல் மெமரி ஆப்ஷனுடன் கூடுதலாக 32ஜிபி வரையிலான வசதியுடன் மைக்ரோ எஸ்டி காரிடினை பெற்றிருக்கும்.

அடுத்த சில வாரங்களுக்குள் மைக்ரோமேக்ஸ் பாரத் 1 மற்றும் மைக்ரோமேக்ஸ் பாரத் 2 விற்பனைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here