விவோ வி5 பிளஸ் ஸ்மார்போன் மொபைலை 10வது ஐபிஎல் போட்டிகள் நடந்து வருவதனை கொண்டாடும் வகையில் ரூபாய் 25,990 விலையில் விவோ V5 பிளஸ் ஐபிஎல் எடிசன் மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.25,990க்கு விவோ V5 பிளஸ் ஐபிஎல் எடிசன் மொபைல் அறிமுகம்

விவோ V5 பிளஸ் ஐபிஎல்

  • ரூ. 25,990 விலையில் விவோ V5 பிளஸ் ஐபிஎல் மொபைல் கிடைக்கும்.
  • இன்று முதல் (10/04) பிளிப்காரட் ,  விவோ கடைகள் மற்றும் மொபைல் ஷோரூம்களில் கிடைக்கும்.
  • 10வது ஐபிஎல் லோகோ பின்புறத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

ரூ.25,990க்கு விவோ V5 பிளஸ் ஐபிஎல் எடிசன் மொபைல் அறிமுகம்

ஐபிஎல் எடிசன் மாடலில் புதிய மேட் பிளாக் வண்ணத்தை பெற்றிருப்பதுடன் கூடுதலாக 10வது ஐபிஎல் லோகோ பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது. மற்றபடி வேற எந்த மாற்றங்களும் இல்லை.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட Funtouch OS 3.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற விவோ வி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 அங்குல முழு எச்டி திரை பெற்றிருப்பதுடன் 4ஜிபி ரேம் உடன் இணைந்து செயல்படுகின்ற 2.0GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ப்ராசசரை பெற்று விளங்குகின்றது.

64ஜிபி மொபைல் சேமிப்பு வசதியுடன் கூடுதலாக மைக்ரோ எஸ்டி ஆப்ஷன் வழங்கப்படவில்லை விவோ வி5 பிளஸ் ஐபிஎல் ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் சோனி IMX376 1/2.78 இஞ்ச் சென்சார், f/2.0 அபெர்ச்சர், 5p லென்ஸ், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 20 மெகாபிக்சல் கேமரா முன்புறத்தில் கொண்டுள்ளது.

ரூ.25,990க்கு விவோ V5 பிளஸ் ஐபிஎல் எடிசன் மொபைல் அறிமுகம்

3055mAh பேட்டரி திறன் மூலம் செயல்படுகின்ற மொபைலின் துனை விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, USB OTG, 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவை வழங்குகிறது. கருவியின் அளவுகள் 152.80×74.00×7.26mm நடவடிக்கைகள் மற்றும் 158.60 கிராம் எடையுடையது.

இன்று முதல் (10/04/2017) பிளிப்காரட் ,  விவோ எக்ஸ்ஷோரூம் கடைகள் மற்றும் மொபைல் ஷோரூம்களில் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here