இந்தியாவின் ஸ்வைப் டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் குறைந்த விலை 4ஜி வோல்ட்இ வசதியுடன் கூடிய ஸ்வைப் நியோ பவர் ரூ.2,999 விலையில் மொபைல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்வைப் நியோ பவர் 4ஜி
தொடக்க நிலை ஸ்மார்ட்போன் மொபைல்கள் 4ஜி ஆதரவுடன் பல்வேறு நிறுவனங்கள் ரூ. 3000 முதல் ரூ. 4500 விலைக்குள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் நிலையில் ஸ்வைப் நிறுவனமும் இணைந்துள்ளது.
;நியோ பவர் மொபைல் 4 அங்குல FWVGA திரையுடன் 480×850 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக உள்ள கிளாஸ் கார்னிங் கொரில்லா பாதுகாப்பு தன்மையுடன் வந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்துடன் கூடிய நியோ பவர் 1.3GHz குவாட் கோர் பிராசஸருடன் கூடிய 512MB ரேம் கொண்டு இயக்கப்படுகின்ற மொபைலில் 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் கூடுதலாக நீட்டிக்க 32ஜிபி சேமிப்பு மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா துறையில் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக 5 மெகாபிக்சல் கேமரா பின்புறத்திலும், முன்புறத்தில் செல்பி படங்களை பெற 2 மெகாபிக்சல் கேமரா இடம் பெற்றுள்ளது.
2,500 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற மொபைலில் 4G, VoLTE, Wi-Fi, புளூடூத் 4.0 மற்றும் GPS ஆகியவற்றை கொண்டுள்ளது. ரூ. 2999 விலையில் இ-காமர்ஸ் இணையதளத்தில் ஸ்வைப் நியோ பவர் ஸ்மார்ட்போன் கருப்பு, கிரே மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது.