ரூ.3,499 க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் 2 மொபைல் அறிமுகம்

இந்தியாவின் மொபைல் தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸ் புதிதாக மைக்ரோமேக்ஸ் பாரத் 2 என்ற பெயரில் குறைந்த விலை 4ஜி வோல்ட்இ ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 2

  • ரூ. 3499 விலையில் இந்த மொபைல் விற்பனைக்கு கிடைக்கும்.
  • பாரத் 2 மொபைலில் முக்கிய அம்சமாக 4G VoLTE வசதி உள்ளது.
  • தற்பொழுது கோல்டு நிறத்தில் மட்டுமே கிடைக்கின்றது.
மைக்ரோமேக்ஸ் பாரத் 2 ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தைகளில் விற்பனைக்கு சில நாட்களுக்கு முன்னதாக வெளிவந்த நிலையில் நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இதன் விலை ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் எனினும் மொபைல் பெட்டியில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.3,750 என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பாரத் 2 கைப்பேசியில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்துடன் செயல்படும் , 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் SC9832 குவாட்கோர் பிராசஸர் மற்றும் 512MB ரேம் வழங்கப்பட்டுள்ளது.   டூயல் சிம் ஸ்லாட் வசதியுடன் 4.0 இன்ச் WVGA 480×800 பிக்சல் தீர்மானத்தை கொண்ட டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது.
4GB  மொபைல் சேமிப்பு வசதியுடன்,  கூடுதலாக சேமிப்பை 32 GB வரை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி வசதியும் கொண்டுள்ள பாரத் 2 ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் பின்புற பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், முன்புறத்தில் 0.3 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
1300mAh திறன் பெற்ற பேட்டரியில் செயல்படுகின்ற பாரத் 2 மொபைலில் 3.5mm ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்ட ஆதரவு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் பாரத் 2 விலை ரூ. 3,499 ஆகும்.

Recommended For You