ரூ.4,199 விலையில் இன்டெக்ஸ் அக்வா 4ஜி மினி மொபைல் தொடக்க நிலை ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 அங்குல திரையுடன் அகுவா மினி மொபைல் வந்துள்ளது.

 இன்டெக்ஸ் அக்வா 4ஜி மினி

  • ரூ. 4199 விலையில் 4 அங்குல FWVGA திரையுடன் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது.
  • 512MB ரேமுடன் 4ஜிபி உள்ளடங்கிய மெமரியை பெற்றதாக வந்துள்ளது.
  • VoLTE சிறப்பம்சத்தையும் வழங்குகின்றது.
  • 5MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனுடன் வந்துள்ளது.

இன்டெக்ஸ் அகுவா 4G மினி ஸ்மார்ட்போனில் 4.0 அங்குல FWVGA திரையுடன் 480×854 பிக்சல் தீர்மானத்தை பெற்றிருப்பதுடன் 1.3GHz க்வாட் கோர் ஸ்பிரெட்டிரம் SC98232C பிராசஸருடன் இணைந்த 512MB ரேம் பெற்றுள்ளது.

4GB  உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் அதிகபட்சமாக 32GB வரையில் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக பெறலாம். அக்வா 4G மினி மொபைலில் 5MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனுடன் அமைந்திருக்கின்ற நிலையில் முன்புறத்தில் 0.3MP VGA  கேமரா இடம்பெற்றுள்ளது. 1450mAh பேட்டரி திறனை பெற்று விளங்குகின்றது.

இந்த கருவியில் கூடுதல் விருப்பங்களாக 4G, வை-ஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் வசதியை பெற்றுள்ளது.

ரூ.4,199 விலையில் இன்டெக்ஸ் அக்வா 4G மினி மொபைல் கிடைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here