நோக்கியா பிராண்டில் ஹெச்எம்டி அறிமுகம் செய்ய உள்ள நோக்கியா 9 ஸ்மாரட்போன்  விலை ரூ.45,000 என்ற ஆரம்ப விலையில் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நோக்கியா 9 ஸ்மாரட்போனில் 6ஜிபி ரேம்..!

 நோக்கியா 9 ஸ்மாரட்போன்

வருகின்ற ஜூன் மாதம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற 9 ஸ்மார்ட்போன் கருவியில்  5.5 இஞ்ச் QHD OLED திரையை பெற்றிருப்பதுடன் 6ஜிபி ரேம் பெற்று க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிரசஸசர் பெற்றதாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கண் கருவிழி ஸ்கேனர் அம்சத்துடன் நோக்கியா ozo ஆடியோ வசதியை பெற்றிருக்கூடும், 22 மெகாபிக்சல் பின்புற கேமரா இரட்டை லென்ஸ் வசதியுடன் , முன்புறத்தில் 12 மெகாபிக்சல் கேமரா பெற்றிருப்பதுடன் மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான  க்வால்காம் குயீக்சார்ஜ் 4.0 போன்றவற்றை பெற்றதாக வரவுள்ளது.

நோக்கியா 9 ஸ்மாரட்போனில் 6ஜிபி ரேம்..!

எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 நுட்ப விபரம்

 • 5.5-இஞ்ச் QHD OLED டிஸ்பிளே
 • ஸ்னாப்டிராகன் 835, அட்ரெனோ 540
 • 22 MP டூயல் லென்ஸ் Carl-Zeiss பின்புற கேமரா
 • 12 MP முன்பக்க கேமரா
 • 6 GB ரேம்
 • 64 GB / 128 GB சேமிப்பு
 • 3800 mAH பேட்டரி
 • க்வால்காம் குயீக்சார்ஜ் 4.0
 • ஐரிஸ் ஸ்கேனர்
 • கைரேகை ஸ்கேனர்
 • நோக்கியா OZO ஆடியோ அம்சம்
 • IP68 சான்றிதழ்
 • ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகட்

GeekBench தளத்தில் லீக்கான 6ஜிபி ரேம் விபரம்

நோக்கியா 9 ஸ்மாரட்போனில் 6ஜிபி ரேம்..!

இந்தியாவில் நோக்கியா 3310நோக்கியா 3 , நோக்கியா 5 ,நோக்கியா 6 மொபைல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here