ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலை தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி நிலையில் அடுத்து ரூ.500-க்கு 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் கூடிய ஃபீச்சர் போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜியோ 4G VoLTE ஃபீச்சர் போன்

ரூ. 300 விலைக்கு கிடைத்த வந்த 1ஜிபி 4ஜி டேட்டாவை அதே விலைக்கு 30 ஜிபி என மாற்றிய பெருமை கொண்ட ஜியோ நிறுவனம் அடுத்த மொபைல் புரட்சி செய்ய தயாராகி வருகின்றது.

பல மாதங்களளாக பல்வேறு செய்திகள் 4ஜி ஃபீச்சர் போன் பற்றி வெளியாகி வரும் நிலையில் எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள புதிய செய்தி ஒன்றில் ஜியோ அறிமுகப்படுத்த உள்ள 4ஜி ஆதரவு பெற்ற போன் விலை 500 மட்டுமே என  உறுதியாக தெரிவிக்கின்றது.

2ஜி சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் நேரடியாக 4ஜி சேவைக்கு மாறும் வகையில் ஜியோ அறிமுகப்படுத்த உள்ள ஃபீச்சர் போன் இருக்கலாம் என கருதப்படுகின்றது. குறிப்பாக இந்த போன் ரூ.650 -ரூ.975 விலைக்குள் ஒரு மொபைல் விலை அமையும் என ஹெச்எஸ்பிசி டைரக்டரும் டெலிகாம் ஆய்வாளருமான ராஜீவ் சர்மா அவர்களை மேற்கோளிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் சமீபத்தில் வெளியான தகவலின் படி ரூ. 2369 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என வெளியான நிலையில், இதற்கு முன்பாக ரூ. 1700-ரூ.1800 என தகவல்கள் வெளியாகி நிலையில் மீண்டும் தற்போது ரூ.500 என தெரிவிக்கப்படுகின்றது.

வருகின்ற ஜூலை 21ந் தேதி ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர பொது கூட்டம் நடைபெற உள்ளதால் அன்றைய தேதியில் இந்த மொபைல், ஜியோஃபைபர், ஜியோ டிடிஎச் போன்றவற்றை பற்றிய விபரங்களை ரிலையன்ஸ் இன்டஸ்ட்டிரீஸ் வெளியிடலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜியோஃபை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 509 கட்டணத்தில் 224ஜிபி டேட்டா சலுகையை சமீபத்தில் ஜியோ அறிவித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com