7 இன்ச் அகலம் கொண்ட இன்டெக்ஸ் iBuddy IN-7DD01 டேப்ளெட் அழைப்புகளை ஏற்கும் தன்மையுள்ள டேப்ளெட் ரூ.5,499 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.5,499 விலையில் இன்டெக்ஸ் iBuddy டேப்ளெட் விற்பனைக்கு வந்தது

ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தினை கொண்டு செயல்படும் iBuddy டெப்லெட்டில் மீடியாடெக் MTK8321 குவாட் கோர் பிராசஸருடன் 1ஜிபி ரேம் பெற்று விளங்குகின்றது. இன்டர்னல் சேமிப்பு திறன் 8 ஜிபி பெற்றுள்ளது. கூடுமலாக 32 ஜிபி வரையில் சேமிப்பு திறனை அதிகரிக்கும் வகையில்  மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தி கொள்ளலாம்.

2 மெகாபிக்சல் ரியர்கேமரா பெற்று ,முன்பக்கத்தில் 0.3 மெகாபிக்சல் கேமராவை பெற்று விளங்குகின்றது. 2800mAh பேட்டரி பேக்கப் பெற்றுள்ளது. 3ஜி ஆதரவுடன் , வைஃபை , பூளூடூத் ,ஜிபிஎஸ் போன்ற வசதிகளை பெறலாம்.

சக்திவாய்ந்த பிராசஸருடன் , சிறப்பான கால் திறனை பெற்று விளங்குகின்ற வகையிலும் நவீன நுட்பத்துடன் , பல நவீன வசதிகள் போன்றவற்றை பெற்று இளைய தலைமுறையினருக்கு ஏற்ற மாடலாக மல்டிடாஸ்கிங் ,அதிக பேக்கப் கொண்ட டேப்ளெட் ஆக விளங்கும் என இன்டெல் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமேசான் தளத்தின் வாயிலாக எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்படுகின்ற இன்டெக்ஸ் iBuddy டேப்ளெட் சலுகை விலையில் ரூ. 4,799 விலையில் வாங்க கீழுள்ள படத்தை க்ளிக் பன்னுங்க…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here