ரூ.59,790 விலையில் லீ ஈகோ சூப்பர்3 சீரிஸ டிவி வெளிவந்தது

லீ ஈகோ சூப்பர்3 சீரிஸ் தொலைக்காட்சி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. லீமால் மற்றும் பிளிப்கார்ட் வழியாக ஆகஸ்ட் 10 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

லீ ஈகோ சூப்பர்3 சீரிஸ் விலை பட்டியல்

  •  சூப்பர்3 X55 – ரூ.59,790
  • சூப்பர்3 X65 – ரூ.99,790
  • Super3 Max65 – ரூ.1,49,790
மூன்று மாடல்களுமே 1.7GHz Mstar 6A928 குவாட்கோர் சிபியூ உடன் இனைந்த Mali-T760 MP4 GPU இனைந்து செயல்படும் வகையில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட டிவிகளாகும். 
பூளூடுத் , வை-ஃபை , HDMI , யூஎஸ்பி போர்ட்  , மைக்ரோ எஸ்டி ஸ்லாட் , டியூவல் பேன்ட் MMIO  போன்ற பல நவீன வசதிகளை பெற்றுள்ளது.
சூப்பர்3 X55 டிவி 55 இன்ச் திரை அகலத்துடன் செயல்படுகின்றது. மற்ற இரு டிவிகளின் திரை 64.53 இன்ச் ஆகும்.