ரூ.8,499 விலையில் குழந்தைகளுக்கு லெனோவா CG சிலேட் டேப்ளெட் அறிமுகம்

  Ads
  ரூ.8,499 விலையில் குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான லெனோவா சிஜி சிலேட் டேப்ளெட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் சிலேட் டேப்ளெட் வாயிலாக கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை பெற இயலும்.

  கல்வி சார்ந்த நுட்பங்களை வழங்கும் கன்வேஜீனியஸ் நிறுவனத்துடன் இணைந்து லெனோவா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள CG சிலேட் டேப்ளெட் விலை ரூ.8,499 ஆகும். எக்ஸ்குளூசிவாக பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அறிமுக சலுகையாக ரூ.1000 தள்ளுபடியில் ரூ.7,499 க்கு கிடைக்கும்.
  லெனோவா CG சிலேட் டேப்ளெட் 7 இன்ச் (1024 x 600 pixels)  ஐபிஎஸ் டிஸ்பிளே உடன் இனைந்த 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT8127 பிராசஸருடன் இணைந்த 1 ஜிபி ரேம் பெற்று 8 ஜிபி வரையிலான சேமிப்பு திறனுடன் கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை விரிவுப்படுத்திக் கொள்ள இயலும். இது 5.1 ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.
  மேலும் 2 மெகாபிக்சர் ரியர் கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முகப்பு கேமரா உடன் 3450mAh பேட்டரி மேலும் Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, மற்றும் micro USB போன்றவற்றை பெற்றுள்ளது. 
  லெனோவா CG சிலேட் டேப்ளெட் சிறப்பு அம்சங்களாக குழந்தைகளுக்கான  வீடியோ வடிவிலான கதைகள் , படங்கள் , மின் புத்தகங்கள் ,விளையாட்டு , கார்டூன் என பல சிறப்பம்சங்கள் குழந்தைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
  இன்றே ரூ.7,499 சலுகை விலையில் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிதர க்ளிக் பன்னுங்க ; 
   BUY Lenovo CG Slate

  Comments

  comments