இந்திய கூல்பேட் பிரிவு புதிய கூல்  VR 1x என்ற பெயிரிலான விர்ச்சூவல் ரியாலிட்டி ஹெட்செட் ரூ.999 விலையில் அமேசான் தளத்தின் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ரூ.999 விலையில் கூல்பேட் கூல் VR 1x ஹெட்செட் அறிமுகம்

கூல்  VR 1x  ஹெட்செட் 4.7 இன்ச் முதல் 5.5 இன்ச் திரை கொண்ட  (1280×720) மொபைல்களில் விர்ச்சூவல் ரியாலிட்டி  முறையில் சிறப்பான படங்களை மிக நுனுக்கமாக ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் நோட் 3 லைட் , நோட் 3 ப்ளஸ் மற்றும் நோட் 3 போன்ற மொபைல்களுக்கு சிறப்பான அனுபவத்தினை தரவல்லதாக விளங்கும்.

குறைவான விலையில் மிகச்சிறப்பான விஆர் ஹெட்செட்டாக கூல் விஆர் 1எக்ஸ் விளங்குகின்றது. 95 டிகிரி முதல் 100 டிகிரி வரையிலான கோண அளவில் சிறப்பாக பார்க்கும் வகையில் லென்ஸ்களை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

கூல்பேட் கூல் VR 1x விலை ரூ.999 க்கு அறிமுக சலுகையாக கிடைக்கின்றது,

அமேசான் தளத்தில் பார்வையிட ;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here