ரூ.5999 பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 4ஏ மொபைல்கள் 4 நிமிடத்தில் 2,50,000 மொபைல்கள் விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. அடுத்த விற்பனை மார்ச் 30ந் தேதி நடைபெற உள்ளது.

4 நிமிடத்தில் 2.50 லட்சம் ரெட்மி 4A மொபைல்கள் விற்பனை சாதனை..!

  ரெட்மி 4A சாதனை

  • 4 நிமிடத்தில் 2,50,000 மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • விநாடிக்கு 1500 மொபைல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • அமேசான் மற்றும் எம்ஐ தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.

1 மில்லியன் பயனர்களுக்கு மேல் அமேசான் தளத்தில் அறிவிக்கை (Notifiy me) செய்ய பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று 12 மணிக்கு தொடங்கிய விற்பனை அமேசான் தளத்தை 5 மில்லியன் மக்கள் ரெட்மி 4ஏ கருவியை வாங்க நுழைந்துள்ளனர் என அமேசான் தெரிவிக்கின்றது.

மேலும் விநாடிக்கு 1500 முன்பதிவுகள் செய்யப்படதாகவும் , அமேசான் மற்றும் எம்ஐ தளங்களின் வாயிலாக 2,50,000 மொபைல்கள் வெறும் நான்கே நிமிடத்தில் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளது.  அடுத்த விற்பனை மார்ச் 30ந் தேதி இரு தங்களிலும் நடைபெற உள்ளது.

4 நிமிடத்தில் 2.50 லட்சம் ரெட்மி 4A மொபைல்கள் விற்பனை சாதனை..!

ரெட்மி 4 ஏ நுட்பங்கள் விபரம்

5 அங்குல HD (720×1280 பிக்சல் தீர்மானத்துடன் 1.4GHz  க்வாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC பெற்று 2GB ரேம் உடன் இணைந்து செயல்படுகின்ற ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 8  தளத்தை பெற்றுள்ளது.

கேமரா

13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன்  செயல்படுகின்ற 5 மெகாபிக்சல் கேமராவினை முன்பக்கத்தில் பெற்றுள்ளது. 16GB உள்ளடங்கிய மெமரி உடன் கூடுதலாக மெமரியை அதிகரிக்க 128GB மைக்ரோ எஸ்டி அட்டையுடன் கிடைக்கின்றது.

4ஜி ஆதரவினை பெற்றுள்ள  4ஏ விலை ரூ.5,999 மட்டுமே ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here