சமீபத்தில் லண்டனில் நடந்த தீவரவாத தாக்குதலுக்கு காரணமாக வாட்ஸ்ஆப் என்கிரிப்ட் வசதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்ஆப் என்கிரிப்ட்

கடந்த 22ந்தேதி  மர்ம நபர் ஒருவர், வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் மீது வேகமாக கரை ஓட்டி வந்து சாலையோரம் இருந்தவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை நிகழ்த்திய அதே நபர், லண்டன் நாடாளுமன்றம் சென்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். அந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். நாடாளுமன்றத்தில் இருந்த பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுட்டு வீழ்த்தினர். அந்த மர்ம நபர் காலித் மசூத் என்பது பின்னர் அடையாளம் காணப்பட்டது.

இந்த தாக்குதலின் காரணமாக 4 நபர்கள் உள்பட 50க்கு மேற்பட்டவர்கள் படுகாயங்கள் அடைந்தனர். இந்த தாக்குதல் குறித்தான தீவரமான தேடலில் ஈடுபட்டு வரும் லண்டன் போலிசார் காலித் மசூத் வாட்ஸ்ஆப் செய்திகள் உள்பட பல்வேறு தகவல்களை ஆராய்ந்து வருகின்ற நிலையில் வாட்ஸ்அப் வழங்குகின்ற மறையாக்கம் எனப்படுகின்ற என்கிரிப்ட் வசதி தீவிரவாதிகள் ஒளிந்துகொள்ளும் இடமாக இருக்கக் கூடாது என பிரிட்டன் உள்துறைச் செயலர் ஆம்பர் ரட் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் வழங்குகின்ற 256 பிட் என்கிரிப்ட் உள்பட கூகுள் , பேஸ்புக் , டிவிட்டர், டெலிகிராம், வேட்பிரஸ் மற்றும் ஜஸ்ட் போன்றவற்றின் தகவல்களை ஊடுருவும் வகையிலான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று ரட் கேட்டுக் கொண்டுள்ளார்.