ரூ.9,999 விலையில் லாவா எக்ஸ்80 டேப்ளெட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாவா X80 சிறப்பு அம்சம் என்னவென்றால் இன்டெல் ஆட்டாம் பேட்ரெயில் பிராசஸர் பெற்றுள்ளது.

லாவா X80 டேப்ளெட் விற்பனைக்கு வெளியிடப்பட்டது

 X80 டேப்ளெட் மிக அகலமான 8 இன்ச் (1280 x 800 pixels) IPS OGS டிஸ்பிளேவுடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டாம் பேட்ரெயில் குவாட்கோர் பிராசஸர் பெற்று 1.83 ஜிகாஹெர்ட்ஸ் டர்போ பூஸ்டருடன் இணைந்த 1 ஜிபி ரேம் பெற்று ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குதளத்தில் செயல்படுகின்றது. 16ஜிபி இன்டர்னல் மெம்மரியுடன் இணைந்த 32ஜிபி வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.

5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா வீடியோ ரெக்கார்டிங் வசதியுடன்விளங்குகின்றது. மேலும் 3.2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா செல்ஃபீ படங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்றது. லாவா எக்ஸ்80 டேப்ளெட் 3ஜி ஆதரவுடன் கூடிய வாய்ஸ் கால் தொடர்பினை பெறலாம். மேலும் வை-ஃபை , பூளூடூத் யூஎஸ்பி 2.0 போன்றவை பெற்றுள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் லாவா X80 டேப்ளெட் ரூ.9,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

 Buy Tablets Amazon :   Tablets List

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here