மேம்படுத்தப்பட்ட புதிய லாவா Z10 மொபைல் 3ஜிபி ரேம் வசதியுடன் ரூ.11,500 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் Z10 மொபைல் 2ஜிபி ரேம் மாடல் ரூ.9,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய லாவா Z10 மொபைல்

ரூ.9999 விலையில் 2ஜிபி ரேம் பெற்ற லாவா Z10 ஸ்மார்ட்போனை மார்ச் மாத இறுதியில் இந்திய தயாரிப்பாளரான லாவா வெளியிட்டது. இதே சமயத்தில் மற்றொரு மாடலாக லாவா Z25 மொபைல்  4ஜிபி ரேம் ரூ.18,000 விலையில் வெளியானது. சமீபத்தில் லாவா ஏ77 ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் வந்தது.

தற்பொழுது  2ஜிபி ரேம் பெற்ற மாடலாக இசட்10 ஸ்மார்ட்போனில் முந்தைய மாடலில் பிராசஸர்களில் மாற்றம் இல்லாமல் 3ஜிபி ரேம் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

5 அங்குல ஹெச்டி திரை பெற்ற இந்த கருவியில் 720×1280 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய 2.5டி கிளாஸ் பெற்ற 64பிட் மீடியாடெக் MT6735 பிராசஸர் கொண்டு 2ஜிபி மற்றும் 3ஜிபி ரேம் வசதியுடன் இயக்கப்படுகின்றது. இதில் 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதி வழங்கப்பட்டு கூடுதலாக மெமரி அதிகரிக்க மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் 128ஜிபி வரை வழங்கப்படுகின்றது.

கேமரா

ஆண்ட்ராய்டு 6.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஸ்டார் ஓஎஸ்3.3 தளத்தில் செயல்படுகின்ற இந்த கருவியில் பொக்கோ மற்றும் நைட் மோட் பெற்று f/2.0 உடன் கூடிய எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா பின்புறத்திலும் , வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபீ படங்களுக்கு ஸ்பாட்லைட் பெற்ற 5 மெகாபிக்சல் கேமரா முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பவர் சேவர் மோட் மற்றும் சூப்பர் பவர் சேவர் மோட் என இருவிதமான ஆப்ஷன் பெற்ற 2620mAh பேட்டரியில் இயக்கப்படுகின்ற ஸ்மார்ட்போனில் 11 இந்திய மொழிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லாவா சிறப்பு சலுகையாக ஒரு வருடத்திற்கு இலவச ஸ்கீரின் மாற்றிதரும் வசதி, 30 நாட்கள் வரை வழங்கப்படுகின்ற ரீட்டர்ன் வசதி மற்றும் 30 நாட்களுக்குள் ஹார்டுவேர் பாதிப்பு ஏற்பட்டால் மாற்றும் வசதியும் வழங்கப்படுகின்றது.

லாவா Z10 நுட்பவிபரம்
வசதிகள் லாவா Z10
டிஸ்பிளே 5 இன்ச்
பிராசஸர் மீடியாடெக் பிராசஸர்
ரேம் 2GB/3GB
சேமிப்பு 16GB நீட்டிக்க SD கார்டு 128GB
பின் கேமரா 8MP
முன் கேமரா 5MP
ஓஎஸ் ஆண்ட்ராய்டு 6.0 அடிப்படை ஸ்டார் ஓஎஸ் 3.3
பேட்டரி 2,620mAh
ஆதரவு இருசிம், 4G VoLTE, புளூடுத், ஜிபிஎஸ், வை-ஃபை
விலை ரூ. 9,999/ ரூ.11,500

 

எங்கே வாங்க

தற்பொழுது லாவா இசட்10 அனைத்து ஆஃப்லைன் ரீடெயிலர்கள் மற்றும் ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ.9999 விலையில் 2ஜிபி மற்றும் ரூ.10,500 விலையில் 3ஜிபி ரேம் கிடைக்கின்றது.