மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்முனைவர்களுக்கான முன்னனி சமூக வலைதளமான லிங்க்டுஇன் நிறுவனத்தை $ 26.2 பில்லியன் விலைக்கு வாங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக திரு.சத்திய நாதெல்லா பொறுப்பேற்ற பின்னர் மிகப்பெரிய குழுமத்தினை வாங்கியுள்ளது. உலக அளவில் 433 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள லிங்க்டுஇன் தளம் தொழில் முனைவோர் மற்றும் வல்லுனர்களுக்கான மாபெரும் சமூக வலைதளமாக செயல்பட்டு வருகின்றது.

கடந்த 13 வருடங்களுக்கு மேலாக தனித்துவமான தன்மையுடன் சமூக வலைதளங்களில் சிறப்பான பங்களிப்பினை வழங்கிவரும் லிங்கட்இன் நிறுவனத்தின் வாயிலாக 433 மில்லியன் பயனாளர்களும் மாதந்தோறும் 105 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று வருகின்றது.

தற்பொழுது லிங்க்ட்இன் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் திரு. ஜெஃப் வெய்னர் அவர்களே தொடர்ந்து தலைமை அதிகாரியாக நீடிப்பார். மேலும் மைக்ரோசாப்ட் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டாலும் தனக்கே உரித்த்தான பிரண்டு மதிப்பிலே தொடர்ந்து நீடிக்கும் என திரு.சத்திய நாதெல்லா தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் டெக்கனிகல் உலகில் மிகப்பெரிய கையகப்படுத்தலாக இது விளங்கும்.